பாஜக தன்னிச்சையாக பிரச்சாரம் : அதிமுகவினரை அதிர வைத்துள்ளது

பாஜக தன்னிச்சையாக பிரச்சாரம் : அதிமுகவினரை அதிர வைத்துள்ளது

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இப்போதே பாஜக தன்னிச்சையாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது அதிமுகவினரை அதிர வைத்துள்ளது.

பாஜக தன்னிச்சையாக பிரச்சாரம் : அதிமுகவினரை அதிர வைத்துள்ளது

தமிழகத்தில் காலூன்ற சாதூரியமாக காய் நகர்த்தி வரும் பாஜக, ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. பாஜகவுக்கு எதிராக இருக்கும் திமுகவை இந்த தேர்தலில் படுதோல்வியை அடையச்செய்து ஓரம்கட்டியே தீருவோம் என்று மத்திய பாஜக தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது, அனல் பறக்கும் இந்த வேளையில்தான், அதிமுக பாஜகவுக்கு 20 தொகுதிகளை வழங்கியது.

பாஜக தன்னிச்சையாக பிரச்சாரம் : அதிமுகவினரை அதிர வைத்துள்ளது

தேசிய கட்சி என்பதால் 40 தொகுதிகள் கொடுக்க வேண்டுமென்ற பாஜகவின் கோரிக்கையை நிராகரித்த அதிமுக, 20க்கு மட்டுமே ஒப்புக் கொண்டது. அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது. ஆனால், பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது ஒதுக்கப்படவில்லை. தொகுதி பங்கேட்டில் எங்களுக்கு அதிருப்தியும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லையென தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.

பாஜக தன்னிச்சையாக பிரச்சாரம் : அதிமுகவினரை அதிர வைத்துள்ளது

இந்த நிலையில், அதிமுக தொகுதிகளை தருவதற்கு முன்னரே தனக்கான தொகுதிகளை கைப்பற்றிக் கொண்ட பாஜக தனது வேட்பாளர்களை வைத்து பிரச்சாரத்தையே தொடங்கி விட்டது. இதில், பாஜகவின் பிரபலமான முகங்களை கொண்டு ஒருசில தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்களாம். அதோடு, அதிமுக கால்பதித்த இடங்களான கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய சில இடங்களையும் வேண்டுமென மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.

பாஜக தன்னிச்சையாக பிரச்சாரம் : அதிமுகவினரை அதிர வைத்துள்ளது

இந்தநிலையில், அதிமுகவிலிருந்து தொகுதி கொடுக்கப்பட்ட பிறகு, பாஜகவின் இந்த தன்னிச்சையான போக்கு அதிமுகவின் இரட்டை தலைமையை அதிர வைத்திருக்கிறது. இதுவரையில் இப்படியான கட்சிகளோடு நாம் கூட்டணி அமைத்ததே இல்லையென மூத்த தலைவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். பாஜக தனது ஆட்டத்தை ஆரம்பித்தது. அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*