பாண்டவர்கள் நாங்கள்: துரியோதனன் கூட்டத்தை எதிர்த்து தர்மயுத்தம் –டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை அதிமுக, திமுக அதிரடியாக களமிறங்கியுள்ளன. திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டுமென்று, பாஜகவுடன் கைகோர்த்து அதிமுக களமிறங்கியிருக்கும் நிலையில், திமுகவையும் அதிமுகவையும் ஒழித்துக்கட்ட அமமுக களமிறங்கியிருக்கிறது.

பாண்டவர்கள் நாங்கள்: துரியோதனன் கூட்டத்தை எதிர்த்து தர்மயுத்தம் –டிடிவி தினகரன்

இந்தத் தேர்தலில் சசிகலா அமமுக பக்கம் நின்று அதிமுகவின் வாக்குகளை சிதறடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியலில் இருந்து ஒதுங்கி, டிடிவி.தினகரன் உட்பட அனைவர்க்கும் அதிர்ச்சியை கொடுத்தார் சசிகலா. இருந்தபோதிலும், சசிகலா இல்லாமலேயே தேர்தலை சந்திப்போம் என டிடிவி.தினகரனும் அவரது ஆதரவாளர்களும் மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாண்டவர்கள் நாங்கள்: துரியோதனன் கூட்டத்தை எதிர்த்து தர்மயுத்தம் –டிடிவி தினகரன்

இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி.தினகரன், மற்ற கட்சி பற்றி பேச விரும்பவில்லை. நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் களமிறங்குகிறோம். அமமுக எம்.எல்ஏக்களுக்கு அதிமுக சீட் தருவதாக கூறப்படுவது எல்லாம் பொய், வதந்தி. டெல்டா மாவட்ட பகுதியைச் சேர்ந்த முக்கியமான நபர் ஒருவர் இந்த வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்.

பாண்டவர்கள் நாங்கள்: துரியோதனன் கூட்டத்தை எதிர்த்து தர்மயுத்தம் –டிடிவி தினகரன்

மேலும், இப்போது தான் உண்மையான தர்மயுத்தம் தொடங்கியிருக்கிறது என்று தெரிவித்த டிடிவி தினகரன், பாண்டவர்கள் ஆகிய நாங்கள் துரியோதனன் கூட்டத்தையும் தீய சக்தி கூட்டத்தையும் எதிர்த்து தர்மத்தை நிலைநாட்ட போரிடுகிறோம். கூட்டணி கட்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*