பாமகவிற்கு எதிராக களமிறங்கும் காடுவெட்டி குருவின் மனைவி!

பாமகவிற்கு எதிராக களமிறங்கும் காடுவெட்டி குருவின் மனைவி!

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா ஜெயங்கொண்டம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாமகவிற்கு எதிராக களமிறங்கும் காடுவெட்டி குருவின் மனைவி!

பாமகவின் முன்னணி தலைவர், எம்.எல்.ஏ, வன்னியர் சங்கத் தலைவராக இருந்த காடுவெட்டி குருவின் மறைவுக்கு பிறகு அவரது மகன் கனலரசன், மாவீரன் மஞ்சள் படை என்னும் இயக்கத்தை ஆரம்பித்தார். அவர் பாமக பக்கம் செல்லவில்லை. கனலரசன் தேர்தலில், இந்திய ஜனநாயக கட்சிக்கு ஆதரவு அளிக்கப்போவதாக தகவல்கள் கசிந்தது. அதை உறுதிப்படுத்திய கனலரசன், மாவீரன் மஞ்சள் படை ஐ.ஜே.கேவுக்கு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.

பாமகவிற்கு எதிராக களமிறங்கும் காடுவெட்டி குருவின் மனைவி!

அண்மையில் திமுக கூட்டணியில் இருந்த ஐ.ஜே.கே வெளியேறியதால், திமுகவுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன் என்றும் கூறிவிட்டார். தற்போது, மக்கள் நீதி மய்யம், ஐ.ஜே.கே மற்றும் சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இந்தத் தேர்தலில் ஐ.ஜே.கேவுக்கு 40 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்திய ஜனநாயக கட்சி சார்பில், ஜெயங்கொண்டம் தொகுதியில் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அக்கட்சியின் தலைவர் பச்சமுத்து தெரிவித்துள்ளார்.

பாமகவிற்கு எதிராக களமிறங்கும் காடுவெட்டி குருவின் மனைவி!

மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர், குருவின் ஆதரவாளர்கள் அவருக்கு மாபெரும் வெற்றியை தேடி தருவார்கள் என்றும், வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும், தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கூட்டணியில், பாமகவுக்கு செக் வைக்கும் விதமாகவே, காடுவெட்டி குருவின் மனைவியை களமிறக்குகிறது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு ஜெயங்கொண்டம் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அங்கு பாமக சார்பில் கே.பாலு போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்காளரும் வேட்பாளரும்
உங்கள் வேங்கை வெற்றியில் விரைவில்

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*