புதுச்சேரியில் கமலுடன் கைகோர்க்கும் ரங்கசாமி: பாஜகவுக்கு டாட்டா கட்டிய என் ஆர் காங்கிரஸ்

புதுச்சேரியில் கமலுடன் கைகோர்க்கும் ரங்கசாமி: பாஜகவுக்கு டாட்டா கட்டிய என் ஆர் காங்கிரஸ்

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் அரசியல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது. ஆட்சி கவிழ்ந்த பின் என்ஆர் காங்கிரஸ்-அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்கள் உரிமை கோரவில்லை. இதனால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தற்போது அங்கு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் அனைவரும் பிஸியாகிவிட்டனர்.

புதுச்சேரியில் கமலுடன் கைகோர்க்கும் ரங்கசாமி: பாஜகவுக்கு டாட்டா கட்டிய என் ஆர் காங்கிரஸ்

புதுச்சேரியில் பாஜக-என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த மறுத்ததால்தான் அந்தக் கூட்டணியிலிருந்து விலக ரங்கசாமி முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முதல்வர் வேட்பாளர் ஆசை காட்டியே நமச்சிவாயத்தைப் பிரித்ததால், ரங்கசாமியை முன்னிறுத்த பாஜக யோசிக்கிறது. இந்தவிரிசலைப் பயன்படுத்திக்கொள்ள பல்வேறு கட்சிகளும் என்ஆர் காங்கிரஸுடன் கைகோர்க்க நினைத்தார்கள். குறிப்பாக, திமுக ரங்கசாமியுடன் இணைவதாக ஒரு தகவல் உலா வருகிறது.

புதுச்சேரியில் கமலுடன் கைகோர்க்கும் ரங்கசாமி: பாஜகவுக்கு டாட்டா கட்டிய என் ஆர் காங்கிரஸ்

இந்தநிலையில், தற்போது மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். மக்கள் நீதி மய்யம் மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜகவுடனான இழுபறியை அனைத்துக் கட்சிகளும் பயன்படுத்திக்கொள்ள முயல்கின்றன. தேர்தலுக்கு முந்தைய கணிப்பில் என்ஆர் காங்கிரஸுக்கே பெருவாரியான ஆதரவு உள்ளது என்று தெரியவந்துள்ளது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*