புதுச்சேரியில் பாஜக கூட்டணியிலிருந்து ரங்கசாமி கட்சி விலகல்!

புதுச்சேரியில் பாஜக கூட்டணியிலிருந்து ரங்கசாமி கட்சி விலகல்!

என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜக என்று மூன்று கட்சிகளும் சேர்ந்து நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைச் சிறப்பாகக் கலைத்து அரசியல் ஆட்டத்தை நிகழ்த்தினர்.

இவர்களுக்கு பெரும்பான்மை இருந்தும் இக்கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. தற்போது, ஆட்சியமைத்தால் மக்கள் மத்தியில் ஆதரவு எழாது என்ற நிலைப்பாட்டில் இந்த முடிவை அவர்கள் எடுத்திருந்தனர்.

புதுச்சேரியில் பாஜக கூட்டணியிலிருந்து ரங்கசாமி கட்சி விலகல்!

இச்சூழலில், புதுச்சேரி வந்த பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியை மட்டுமே விமர்சித்துப் பேசினார். கூட்டணிக் கட்சித் தலைவர்களையோ, யார் முதல்வர் வேட்பாளர் என்பதையோ அவர் எதுவும் பேசவில்லை. அதேபோல திரைமறைவிலும் அதற்கான பேச்சுவார்த்தையே நடைபெறவில்லை.

காங்கிரஸில் பெரும்புள்ளியாக இருந்த நமச்சிவாயத்தைக் கொண்டே பாஜக ஆட்டத்தை ஆரம்பித்தது. இதையடுத்து, அவரை இழுக்க முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று பாஜக அவரை விலை பேசியது. இதையடுத்து, காங்கிரஸில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதால் அவரும் இதற்கு ஒப்புக்கொண்டு பாஜகவில் இணைந்தார்.

புதுச்சேரியில் பாஜக கூட்டணியிலிருந்து ரங்கசாமி கட்சி விலகல்!

ஆனால், தற்போது போட்டிக்கு ரங்கசாமி களமிறங்கியிருக்கிறார். அவர் தன்னைத் தான் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் என எதிர்பார்த்தார். நமச்சிவாயத்திற்கு வாக்கு கொடுத்துவிட்டதால், ரங்கசாமியிடம் பாஜக மேலிடம் கையை விரித்துள்ளது. இச்சூழலில் பாஜக கூட்டணியிலிருந்து விலக என்ஆர் காங்கிரஸ் முடிவுசெய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பாஜக கூட்டணியிலிருந்து ரங்கசாமி கட்சி விலகல்!

இந்தநிலையில், ஏபிபி-சி வோட்டர் நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில், புதுச்சேரியில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது ரங்கசாமிக்குக் கிடைத்த வரவேற்பாகவே பார்க்கப்பட்டது.

இதையடுத்து, மக்கள் மத்தியில் ரங்கசாமியின் அலை அடித்துக்கொண்டிருக்கும் வேளையில், கூட்டணியிலிருந்து வெளியேறுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தனித்துப் போட்டியிட்டாலும் என்ஆர் காங்கிரஸ் மாபெரும் வெற்றிபெறும் என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*