பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பிரதமர் மோடி படத்திற்கு மலர் தூவி நூதன போராட்டம் : த.பெ.தி.கவினர் கைது!!

64 / 100
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பிரதமர் மோடி படத்திற்கு மலர் தூவி நூதன போராட்டம் : த.பெ.தி.கவினர் கைது!!

கோவை : பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பிரதமர் மோடி படத்துக்கு மலர்தூவி “தந்தை பெரியார் திராவிடர் கழகம்” சார்பில் நூதன போராட்டம் நடத்தினர்.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் பிரதமர் மோடி உருவப்படத்துக்கு மலர்தூவும் நூதன போராட்டம் நேற்று காலை கோவையில் நடைபெற்றது.

கோவை அவிநாசி சாலையில் செயல்படும் தனியார் மருத்துவமனை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தை த.பெ.தி.க பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உலகிலேயே அதிகமான விலைக்கு டீசல்-பெட்ரோல் விலையை உயர்த்தி சாதனை படைத்ததாக மோடியின் உருவப்படத்திற்கு மலர் தூவினர்.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பிரதமர் மோடி படத்திற்கு மலர் தூவி நூதன போராட்டம் : த.பெ.தி.கவினர் கைது!!

இதையடுத்து, த.பெ.தி.க பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் பேசுகையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைத்துள்ளது. எனவே, நாடு முழுவதும் ரூ.70க்கு பெட்ரோல்-டீசல் விலையை விற்பனை செய்ய மத்திய அரசால் முடியும். ஆனால், பல மாநிலங்களில் பெட்ரோலின் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏழை,எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மத்திய அரசு
பெட்ரோல்-டீசல் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்று கூறினார்.

த.பெ.தி.க சார்பில் போராட்டம் அறிவித்ததும் உடனடியாக பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் படத்தை அகற்றப்பட்டது. இதையடுத்து, த.பெ.தி.க. பொது செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட 20 பேரை அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர்.

சரவெடி சத்தம் தெறிக்க… தெறிக்க… வெளியான ‘அண்ணாத்த’ அனைத்து பாடல்கள்!

நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டப் போராட்டம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கனமழை எதிரொலி: எட்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

About Vengai Vetri 297 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*