பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கவரி போன்றவற்றை கண்டித்து கோவையில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கோவை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கவரி போன்றவற்றை கண்டித்து கோவையில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும், டோல்கேட்டில் பணம் செலுத்தி செல்ல தனிவழி அமைக்க வேண்டும், மூன்றாம் நபர் காப்பீட்டு பிரிமியத்தை குறைக்க வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

இதுபோன்ற பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி கோஷமிட்டனர். இதுபற்றி லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் முருகேசன் கூறுகையில், டீசல்,பெட்ரோல் விலை உயர்வு, சுங்கவரி கட்டணத்தை ரத்து செய்தல், இ_வேபில் அனுமதி நேரம் அதிகப்படுத்த வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கவரி போன்றவற்றை கண்டித்து கோவையில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

இதையடுத்து, வரும் மார்ச் மாதம் 5ஆம் தேதி, பெங்களூரில் எங்களது சங்கங்கள் சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. மார்ச் மாதம் 15ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட லாம் என்று முடிவு செய்ய உள்ளோம். எனவே, மத்திய-மாநில அரசுகளும் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, எங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*