பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு: காவல் ஆய்வாளர் மீது வழக்கு

64 / 100
பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு: காவல் ஆய்வாளர் மீது வழக்கு

திண்டுக்கல்: பழனி அருகே பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக எழுந்த புகாரையடுத்து காவல் ஆய்வாளர் வீரகாந்தியை ஆயுதப்படைக்கு மாற்றி டிஐஜி விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் வீரகாந்தி. அதே காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு, வீரகாந்தி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு: காவல் ஆய்வாளர் மீது வழக்கு

இந்தப் புகாரையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஏ.டி.எஸ்.பி லாவண்யா தலைமையில், புகார் அளித்த பெண் காவலர் , கீரனூர் காவல்துறையினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், ஆய்வாளர் வீரகாந்தியை ஆயுதப்படைக்கு மாற்றி டிஐஜி விஜயகுமாரி உத்தரவிட்டார். மேலும், பழனி மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் வீரகாந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சரவெடி சத்தம் தெறிக்க… தெறிக்க… வெளியான ‘அண்ணாத்த’ அனைத்து பாடல்கள்!

நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டப் போராட்டம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கனமழை எதிரொலி: எட்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

About Vengai Vetri 297 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*