பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்கவேண்டும்: தொழில் வர்த்தக சபையில் தீர்மானம்… வால்பாறை MLA அமைதிகாப்பது ஏன்?

Polllachi

பொள்ளாச்சி, ஜன.29

பொள்ளாச்சி தனிமாவட்டமாக மாற்றக்கோரி பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையினர் தீர்மானம் நிறைவேற்றினர். 

பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்கவேண்டும்: தொழில் வர்த்தக சபையில் தீர்மானம்... வால்பாறை MLA அமைதிகாப்பது ஏன்?

பொள்ளாச்சி மாவட்டமாகும் அனைத்து தகுதிகள் இருந்தும், பல அரசியல் காரணங்களுக்காக மாவட்டம் ஆகாமல் இருப்பது வேதனையளிக்கிறது. மக்களுக்கான அரசு என்று சொல்பவர்கள் வால்பாறை, முடீஸ், சோலையாறு, சின்கோனா, ஹைபாரஸ்ட் போன்ற பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டும் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏதாவது ஒரு பனி இருக்கிறது என்றால், அவர்கள் கோவை வர குறைந்தது 5 அல்லது 6 மணிநேரமாகிறது. திரும்ப செல்லவும் அதே நேரமாகிறது. மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள்.  

பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்கவேண்டும்: தொழில் வர்த்தக சபையில் தீர்மானம்... வால்பாறை MLA அமைதிகாப்பது ஏன்?

வால்பாறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு  அமைதியாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. பொள்ளாச்சியை வேளாண் மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்று சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சட்டமன்றத்திலேயே கோரியிருந்தார். மாவட்டமாக்க வேண்டிய பணிகளையும் தொடர்ந்தார்.    

ஆனால், தனது தொகுதி மக்கள் இயற்கையாகவே எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை அறிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல்,  அரசுக்கு எந்த கோரிக்கையும் வைக்காமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சியை மாவட்டமாக்க கோரிக்கை வைக்கிறார். அவரோடு இணைத்து அரசுக்கு கோரிக்கை வைத்திருக்க வேண்டாமா?  மக்களுக்கான தேவையறிந்து அவர்களுன் நாடித்துடிப்பு தெரியாதவர்கள் எப்படி மீண்டும் வாக்கையை பெறுவது. சரி  மக்களின் தீர்ப்பை வருகிற சட்டமன்ற தேர்தலில் பார்ப்போம்.  

பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்கவேண்டும்: தொழில் வர்த்தக சபையில் தீர்மானம்... வால்பாறை MLA அமைதிகாப்பது ஏன்?

கடந்த 1857ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பொள்ளாச்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பொள்ளாச்சி கோவை மாவட்டத்தில் கோட்டமாக மாற்றப்பட்டது. அப்போதே சார் ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டு சார் ஆட்சியர் தலைமையில் நிர்வாகம் நடைபெற்று வந்தது. 

அதற்குப் பிறகு பல்வேறு அரசியல் காரணங்களால் பொள்ளாச்சி மாவட்டமாக மாற்றப்படாமல் உள்ளது. பொள்ளாச்சி கோட்டத்தின் கீழ் வட்டமாக செயல்பட்டு வந்த திருப்பூர் தற்போது, மாவட்டமாக  மாற்றப்பட்டு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் 50 ஆண்டு கால கோரிக்கையாக இருந்தும் பொள்ளாச்சி மாவட்ட கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்கவேண்டும்: தொழில் வர்த்தக சபையில் தீர்மானம்... வால்பாறை MLA அமைதிகாப்பது ஏன்?

பொள்ளாச்சியைவிட சிறிய பகுதிகள் எல்லாம் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் காரணங்களுக்காக பொள்ளாச்சி மாவட்டம் ஆக்கப்படாமல் உள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பொள்ளாச்சியை மாவட்டமாக மாற்ற கோரி தற்போது பொள்ளாச்சியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை சார்பில் பொள்ளாச்சியை தனிமாவட்டமாக மாற்றக்கோரி வெள்ளிக்கிழமை தீர்மானம் நடைபெற்றது. 

பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்கவேண்டும்: தொழில் வர்த்தக சபையில் தீர்மானம்... வால்பாறை MLA அமைதிகாப்பது ஏன்?

பொள்ளாச்சியை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தொழில் வர்த்தக சபைத்தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சபரி எஸ்.கண்ணன், பொருளாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தொழில் வர்த்தக சபை உறுப்பினர்கள், பல்வேறு சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். பொள்ளாச்சியை விட மக்கள்தொகையில், பரப்பளவில் குறைவாக உள்ள பகுதிகள் மாவட்டங்களாக மாற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பொள்ளாச்சியை அரசு மாவட்டமாக மாற்றவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. 

மேலும், இந்த கோரிக்கையை முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சர், சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆகியோரிடத்தில் தொழில் வர்த்தக சபை சார்பில் மனு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*