பேசுவோம் அரசியல்: வருகிற சட்டமன்ற தேர்தலில் கதாநாயகன் இலவச திட்டங்கள்

வருகிற சட்டமன்ற தேர்தலில், கதாநாயகன் இலவச திட்டங்கள் தான் இன்று பரபரப்பை உருவாக்கி வருகிறது. ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் மாறி மாறி இலவச திட்டங்களை கவர்ச்சி பொருள்களை காட்டி வாக்குகளை பெறுகிறது.

இலவசங்களை கொடுத்து கொடுத்து வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்ததும் வரியின் பெயரால் மக்களின் மீதே விழுகிறது அந்த சுமை. இதை அறியாத மக்கள் இலவசங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நாம் பெறுகிற இலவசப்பொட்கள் தரமானதா? சரியானதா? என்று எதையும் பார்க்காமல் பெற்றுக்கொண்டு அதை சில மாதங்களில் குப்பையில் போடும் நிலைமையாகிறது.

விலைவாசியாய் கட்டுக்குள் வைக்காத அரசு, இலவசங்களை மட்டும் அள்ளிக் கொடுக்கவேண்டிய நோக்கம் என்ன? இலவசத்தை நிறுத்திவிட்டு விலைவாசி உயர்வை குறைக்கலாம் என்று எந்த அரசியல் கட்சியும் நினைப்பதில்லை.

பேசுவோம் அரசியல்: வருகிற சட்டமன்ற தேர்தலில் கதாநாயகன் இலவச திட்டங்கள்

இந்தியாவில் அரசியல் காட்சிகள் அரசியல் நிறுவனங்களாகின. இவர்களுக்கு தொழிலாகா மாற்றிய பிறகு நாட்டின் மீதும் மக்களின் மீதும் எப்படி அக்கறை வரும். அதை எதிர்பார்ப்பதும் தவறு.

தேர்தலில் பணத்தையும் இலவசங்களையும் பெற்று 5 வருட நமது வாழ்க்கையின் வளர்ச்சியை தீர்மானிப்பது அரசியல் நிறுவனங்களே! இன்று பெட்ரோல், டீசல், கேஸ் அனைத்தும் விண்ணைமுட்டும் அளவிற்கு அரசால் உயர்த்தப்பட்டுள்ளது.

சாமானிய மக்கள் இனி வாழவே முடியாத அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. அரசியல் நிறுவனங்கள் நினைப்பது என்னவென்றால் மக்கள் எப்பவும் துன்பத்திலேயே இருக்கவேண்டும்.

அப்பொழுதுதான் இவர்கள் செய்யும் ஊழலை பற்றியோ அரசை குறைகளைப் பற்றியோ பேசமாட்டார்கள் என்றும், போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் எதுவும் நடத்தமாட்டார்கள் என்றும் நினைக்கிறது. ஒருவன் வறுமையில் வாடும்போது அவன் எப்படி அரசியல் பேசுவான். வயிற்று பசியை போக்குவானா ? அரசியல் பேசுவானா ?.

முன்னாள் முதல்வர் அய்யா காமராஜரைப்போல இனியொரு முதல்வரை இனி இந்த நாடும், நாட்டு மக்களும் பார்க்கப்போவதில்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது.

விரைவில் இந்திய மக்கள் அனைவரும் ஒருநாள் மீண்டும் அடிமையாக்கப்படுவோம் என்பதில் எள்ளளவும் மாற்றமில்லை. நன்றி மீண்டும் பேசுவோம் அரசியல் மக்கள் நலனுக்காகவே…!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*