பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையின் அன்பான வேண்டுகோள்..

13 / 100

வால்பாறை மற்றும் சுற்றியுள்ள தேயிலைத் தோட்ங்களை சுற்றிலும் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நாம் வனங்களுக்கு நடுவில் தான் வாழ்ந்து வருகிறோம் என்பதை அனுதினம் உணரந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும். வனங்களையும், வன உயிரினங்களையும் சார்ந்தே வாழ‌ந்து வருகிறோம்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையின் அன்பான வேண்டுகோள்..

எனவே தற்போது சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகாலை 5 மணிக்கு மேலும் காலை 7 மணி வரையும், மாலை 5 மணிக்கு மேலும் இரவு நேரங்களிலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுவதையும், தனியாக நடமாடுவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தேயிலை தோட்டங்களின் நடுவே தான் நாம் குழந்தைகளுடன் குடியிருந்து வருகிறோம். இப்பகுதியில் நாம்‌ உணவு கழிவுகளையும் மாமிச கழிவுகளையும் வீசிவிடுகிறோம். அதோடு மட்டுமல்லாமல் ஆடு, பசு, கோழி, நாய், என வளர்த்து வருகிறோம். அவைகளும்‌ வனவிலங்குகளை ஊருக்குள்ளும் நகரப் பகுதிகளுக்குள்ளும் வர வைக்கின்றன.

எனவே வீட்டு விலங்குகளை வளர்பப்தை தவிர்த்தால் வனவிலங்குகளை வீடு தேடி வருவதை தவிர்த்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இயலும் என அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, அங்கே நம் சிறிய குழந்தைகளை தனியாக வெளியே செல்வதையும், விளையாட‌ விடுவதையும் தயவுக் கூர்ந்து தவிர்த்து பாதுகாப்புடன் இருக்கும் படி வனத்துறையின் சார்பில் பணிவோடு கேட்டுக்கொள்கிறோம். வீடுகளை சுற்றிலும் புதர்கள் மண்டியிருப்பதை அகற்றி வெளிச்சத்தோடு இருக்கும்படி வைத்துக்கொள்ளவும்

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையின் அன்பான வேண்டுகோள்..

சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை பார்க்கும் ஆவலில் அவைகளை உணவு உண்ணவிடாமல் தொந்தரவு செய்வதும், அருகே சென்று புகைப்படங்கள் எடுப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் வனவிலங்குகள்‌ நடமாடும்‌ பகுதிகளில் தேவையில்லாமல் நடந்து சென்று வேடிக்கை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் வெளியே வனவிலங்குகளை காண செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதை சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள் உறுதி செய்து கொண்டு வனத்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையின் அன்பான வேண்டுகோள்..

அத்தியாவசிய தேவைக்காக‌ வெளியே வரும்போது கையில் தடியும், டார்ச் லைட்டையும்‌ மறக்காமல் எடுத்துச்‌செல்லவும். அவை உங்களை பாதுகாப்பதில் உதவியாக இருக்கும்.

உங்கள் ஒத்துழைப்பு உங்களின் பாதுகாப்பு.

மேலும் குடியிருப்பு மற்றும் எஸ்டேட் பகுதியில் எங்கே வனவிலங்குகளை பார்த்தாலும்‌ உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தகவல் தரவேண்டிய தொலைபேசி எண்: 04253_ 223222 என்று ப. ராஜன், வனவர் தெரிவித்துள்ளார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*