பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

73 / 100

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் முன்னேற்றம் குறித்து கண்காணிப்பதற்காக அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பொன்முடி

அதனடிப்படையில் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது. முன்னாள் அரசு வழக்கறிஞர் பாலமுருகன் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதேபோல, இந்த வழக்கில் வாதங்களை முன் வைப்பதற்காக அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், நேரு, எ.வ.வேலு, பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, ரகுபதி மற்றும் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகள் குறித்த ஆவணங்களை வழங்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதில் சில வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பொன்முடி, செந்தில் பாலாஜி அமைச்சர்களின் வழக்கின் ஆவணங்கள் கோரிய வழக்கை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விக்கிரவாண்டி ரொம்ப முக்கியம்..! பொன்முடிக்கு லேட் நைட் கால் செய்த  மு.க.ஸ்டாலின்..!

வழக்கு ஆவணங்களை வழக்குக்கு சம்பந்தமில்லாத மூன்றாவது நபருக்கு வழங்க முடியாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அமைச்சர்களுக்கு எதிரான வழக்கின் ஆவணங்களை வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலமுருகன் மனு தாக்கல் செய்துள்ளார். தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வழக்கு ஆவணங்களை மூன்றாவது நபருக்கு வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த காலங்களில் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நீதிபதி நிர்மல்குமார் இம்மனுவை விசாரித்த பிறகு விசாரணையை அக்டோபர் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Chennai High Court News in Tamil, Latest Chennai High Court news, photos,  videos | Zee News Tamil

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*