பொள்ளாச்சியில் புலித்தோல் விற்பனை செய்ய முயற்சி : 6 பேர் கொண்ட கும்பலை கைது

பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன் புதூர் பகுதியில் புலித்தோல் விற்பனை செய்வதற்காக ஒரு கும்பல் நடமாடுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து வேட்டைக்காரன் புதூர் பகுதியில் புலித்தோலை விற்பனை செய்யமுயன்ற 6 பேர் கொண்ட கும்பலை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

பொள்ளாச்சியில் புலித்தோல் விற்பனை செய்ய முயற்சி : 6 பேர் கொண்ட கும்பலை கைது
பொள்ளாச்சியில் புலித்தோல் விற்பனை செய்ய முயற்சி செய்த 6 பேர் கொண்ட கும்பலை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்

பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன் புதூர் பகுதியில் புலித்தோல் விற்பனை செய்வதற்காக ஒரு கும்பல் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் உடனே அப்பகுதிக்கு சென்ற போலீசார் சந்தேகத்திற்கு இடமான வகையில் அங்கு நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரித்துள்ளனர்.

இதையடுத்து, பிரசாத் என்பவர் வீட்டில் வேலைசெய்து வந்த மயில்சாமி என்பவர், பிரசாத் வீட்டிலிருந்த புலித்தோலை தெரியாமல் திருடி கொண்டு வந்துவிட்டார். புலித்தோலை தன் வீட்டில் பதுக்கி வைத்து, அதனை மயில்சாமியின் மகன்களின் கூட்டாளிகளுடன் சேர்ந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

அதன் அடிப்படையில், போலீசார் அவர்களின் வாகனத்தை சோதனை செய்ததில் அவர்களிடம் புலித்தோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, புலித்தோலை விற்க முயன்ற பிரவீன், ரமேஷ்குமார், உதயகுமார், மணிகண்டன், சபரி, சங்கர் மற்றும் மயில்சாமி உள்ளிட்ட 6 பேரையும் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*