பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி: அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மீண்டும் தேர்வு

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி: அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மீண்டும் தேர்வு

பொள்ளாச்சி அடுத்த திப்பம்பட்டியைச் சேர்ந்த வரதராஜ், சரஸ்வதி அம்மாள் ஆகியோருக்கு கடந்த 7.6.1953 பிறந்தவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் அவர்கள்.

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி: அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மீண்டும் தேர்வு

கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை அதிமுகவின் கோவை கோவை மாவட்ட மாணவர் அணி அமைப்பாளராக இருந்தார்.

1984 ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரை கதர் வாரிய உறுப்பினராகவும் 1986ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த கோவை மாவட்ட செயலாளராகவும் இருந்தவர்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெ அணி மற்றும் ஜா அணியாக அதிமுக பிரிந்தபோது ஜெயலலிதாவை ஆதரித்தவர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள்.

1989ஆம் ஆண்டில் மேட்டுப்பாளையத்தில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி: அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மீண்டும் தேர்வு

1996ஆம் ஆண்டு பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் தோல்வியைத் தழுவினார்.

1995ஆம் ஆண்டு கோவை புறநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட அவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன்.

1995-96 ஆம் ஆண்டு ஜவுளி வாரிய தலைவரானார். கடந்த 2001ஆம் ஆண்டு பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட பொள்ளாச்சி வி.ஜெயராமன், வெற்றி பெற்றதும் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் மிகக் குறைந்த நாட்களில் அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். 2004ஆம் ஆண்டு மீண்டும் உணவு மற்றும் கூட்டுறவு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு, 2006ஆம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்தார்.

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி: அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மீண்டும் தேர்வு

2006ஆம் ஆண்டு மீண்டும் பொள்ளாச்சி தொகுதியில் வெற்றி பெற்றார் 2007 ஆம் ஆண்டில் அதிமுகவின் தேர்தல் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டார்.

2011 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் உடுமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2012ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை துணை தலைவராக இருந்துவருகிறார்.

தற்போதுவரை பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுகவின் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*