பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி: அமமுக வேட்பாளராக கே.சுகுமார் தேர்வு

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி: அமமுக வேட்பாளராக கே.சுகுமார் தேர்வு

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பொள்ளாச்சி வேட்பாளராக முன்னாள் எம்பி கே.சுகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் 2001 2003 ஆம் ஆண்டு வரை அதிமுகவின் கோவை புறநகர் மாவட்ட செயலாளராகவும் 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதிமுக மாவட்ட இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி: அமமுக வேட்பாளராக கே.சுகுமார் தேர்வு

1986 முதல் 1991 ஆம் ஆண்டு வரை பொள்ளாச்சி பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய தலைவராகவும் 1996 ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்தார்.

2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஊராட்சி தலைவராகவும் 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி: அமமுக வேட்பாளராக கே.சுகுமார் தேர்வு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டபோது, சசிகலா மற்றும் டிடிவி.தினகரனின் ஆதரவாளராக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.

தற்போது, அம்மா அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், அவருக்கு பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அமமுக கட்சி சார்பில் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*