பொள்ளாச்சி பாலியல் வழக்கு; விசாரணை நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

66 / 100

கோவை அக்.28.,

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளின் நீதிமன்ற காவலை நீட்டித்தும், வழக்கு விசாரணையை நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; விசாரணை நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், மணிவண்ணன், வசந்த்குமார், சதீஷ், பாபு, ஹெரோன் பால், அருளானந்தம், அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, வழக்கு விசாரணை கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், குற்றப்பத்திரிக்கை நகல் குற்றவாளிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டு, விசாரணை இன்று காணொளி மூலம் நடைபெற்றது. இதையடுத்து, விசாரணையை வரும் நவம்பர் 2-ஆம் தேதிக்கு கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தார்.

குற்றவாளிகள் நீதிமன்றத்திலிருந்து கடந்த 20-ஆம் தேதி அழைத்து சென்றபோது, கோயம்புத்தூர் புறநகர் பகுதியில் குற்றவாளிகளை அவர்களது உறவினர்கள், சந்திக்க அனுமதித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

சரவெடி சத்தம் தெறிக்க… தெறிக்க… வெளியான ‘அண்ணாத்த’ அனைத்து பாடல்கள்!

நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டப் போராட்டம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கனமழை எதிரொலி: எட்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

About Vengai Vetri 297 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*