மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் புதிய தகவல்

68 / 100

இயக்குனர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் யார் யார் எந்தெந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் புதிய தகவல்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், அதிக பொருட்ச் செலவில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் புதிய தகவல்

இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

வெளியாகியது 'பொன்னியின் செல்வன்' நடிகர்கள் பட்டியல் - எதிர்பார்ப்பில்  ரசிகர்கள்!

கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக ஊரடங்குப் பிறகு, முழுவீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் எந்த நடிகர், எந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது வெளியிடப்படாமல் மறைமுகமாக இருந்தது.

தற்போது எந்தெந்த நடிகர், எந்தெந்தக் கதாபாத்திரம் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்தப் பட்டியலைப் படக்குழுவினர் வெளியிடவில்லை.

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் புதிய தகவல்

இணையதளத்தில் வெளியான இத்திரைப்படத்தின் பட்டியலின்படி பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
சுந்தர சோழர் – பிரகாஷ்ராஜ்
ஆதித்ய கரிகாலன் – விக்ரம்
அருள்மொழி வர்மன் – ஜெயம் ரவி
வந்தியத் தேவன் – கார்த்தி
குந்தவை – த்ரிஷா
நந்தினி – ஐஸ்வர்யா ராய்
பூங்குழலி – ஐஸ்வர்யா லட்சுமி
வானதி – ஷோபிதா
பெரிய பழுவேட்டரையர் – சரத்குமார்
சின்ன பழுவேட்டரையர் – பார்த்திபன்
கடம்பூர் சம்புவரையர்- நிழல்கள் ரவி மலையமான் – லால்
ஆழ்வார்க்கடியான் நம்பி – ஜெயராம்
அநிருத்த பிரம்மராயர் – பிரபு
சோமன் சாம்பவன் – ரியாஸ் கான்
ரவிதாசன் – கிஷோர்
சேந்தன் அமுதன் – அஸ்வின்
கந்தன் மாறன் – விக்ரம் பிரபு
மதுராந்தகன் – அர்ஜுன்
சிதம்பரம் பார்த்திபேந்திர பல்லவன் – ரஹ்மான்
குடந்தை ஜோதிடர் – மோகன்ராம்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*