மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி!

52 / 100

சென்னை தண்டையார்பேட்டை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மதுசூதனனின் உடலுக்கு வி.கே.சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சை பெற்றுவந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் நேற்று மாலை காலமானார். அவரது மறைவு அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில் அதிமுகவினர் திமுகவினர் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி!

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மதுசூதனன் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி!

இந்தநிலையில், மதுசூதனன் உடலுக்கு வி.கே.சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அதிமுகவின் கொடி கட்டிய காரில் வி.கே.சசிகலா சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

முன்னதாக, கடந்த மாதம் மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியறிந்து வி.கே.சசிகலா மருத்துவமனைக்கே சென்று நலம் விசாரித்ததோடு மருத்துவர்களிடமும் அவரது உடல்நிலை பற்றி விசாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*