மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை ஒழிக்கும் திட்டம்: மக்கள் செல்வாக்கை இழந்ததவர் மு.க.ஸ்டாலின் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்வீட்

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை ஒழிக்கும் திட்டம்: மக்கள் செல்வாக்கை இழந்ததவர் மு.க.ஸ்டாலின் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்வீட்

நாங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களையே தாம் ஆட்சிக்கு வந்ததும் செய்வேன் என திரும்ப திரும்ப திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார்.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை ஒழிக்கும் திட்டம்: மக்கள் செல்வாக்கை இழந்ததவர் மு.க.ஸ்டாலின் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்வீட்

தமிழக அரசு மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முழுவதுமாக ஒழிக்க, அதற்கான நவீனத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வந்திருப்பதாக உள்ளாச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியிருக்கிறார்.

இந்தநிலையில், இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில், ‘மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முழுவதுமாக ஒழிக்க, மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு, அதற்கான நவீனத் திட்டத்தையும், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு பல்வேறு கட்டங்களாக தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தி வந்துள்ளதுள்ளது’என்று குறிப்பிட்டுள்ளார்.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை ஒழிக்கும் திட்டம்: மக்கள் செல்வாக்கை இழந்ததவர் மு.க.ஸ்டாலின் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்வீட்

மேலும், தங்களது ஆட்சிக் காலத்தில் அவர்கள் செய்த அராஜக செயல்களால், மக்கள் செல்வாக்கை முழுவதுமாக இழந்ததவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார். அதனால், அதிமுக ஆட்சியில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களையே, தாம் ஆட்சிக்கு வந்ததும் செய்வேன் என திரும்ப திரும்ப திமுக தலைவர் கூறி வருகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், திமுக தலைவர் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று கண்கொத்தி பாம்பாய் அலைந்து கொண்டிருக்கிறார். ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் செய்த மக்கள் நலத் திட்டங்களைகூட, தெரிந்து கொள்ளவில்லை என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை ஒழிக்கும் திட்டம்: மக்கள் செல்வாக்கை இழந்ததவர் மு.க.ஸ்டாலின் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்வீட்
About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*