மரணம் அடைந்த பிறகும்கூட மனிதனை சாதி விடவில்லை – நீதிமன்றம் வேதனை

65 / 100

மரணத்துக்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை என வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரின் உடல்களை தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மரணம் அடைந்த பிறகும்கூட மனிதனை சாதி விடவில்லை - நீதிமன்றம் வேதனை

சென்னை அக். 23.,

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள ஏரிப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தவல்லி என்பவர், தனது கணவருக்கு சொந்தமான நிலத்துக்குச் செல்லும் சாலையில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் உடல்களை தகனம் செய்வதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கிராம மக்களுக்கு மயானத்துக்கு நிலம் ஒதுக்கி உள்ளபோதிலும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர், அதைப் பயன்படுத்த அனுமதிக்காததால் சாலை ஓரங்களில் உடல்களை எரிக்கும் நடைமுறையை பின்பற்றுவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அனைத்து தரப்பினரும் மயானத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அரசுத் துறை அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மரணம் அடைந்த பிறகும்கூட சாதி ஒரு மனிதனை விடவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது எனவும், இப்படிப்பட்ட ஒரு மோசமான ஒரு நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்று வேதனை தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரின் உடலையும் தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மரணம் அடைந்த பிறகும்கூட மனிதனை சாதி விடவில்லை - நீதிமன்றம் வேதனை

மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்த நீதிபதி, மயானம் என அறிவிக்கப்படாத பகுதிகளில் உடல்களை தகனம் செய்யவோ, அடக்கம் செய்யவோ அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

சரவெடி சத்தம் தெறிக்க… தெறிக்க… வெளியான ‘அண்ணாத்த’ அனைத்து பாடல்கள்!

நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டப் போராட்டம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கனமழை எதிரொலி: எட்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

About Vengai Vetri 297 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*