மலைப்பாதை வழியாக சைக்கிளிங்: வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

61 / 100

காட்டு யானைகள் அதிகமாக உலா வரும் ஆனைகட்டி மலைப்பாதை வழியாக சைக்கிளிங் செல்வோர் அதிகரித்து வரும் நிலையில், வனத்துறையினர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை: ஆனைக்கட்டி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. மாங்கரையில் இருந்து 10 கிலோ மீட்டர் வனப்பகுதி வழியாக ஆனைகட்டிக்கு மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் கேரளாவில் இருந்து வரும் யானைகளின் எண்ணிக்கையும் அதிகமாகக் காணப்படும்.

மலைப்பாதை வழியாக சைக்கிளிங்: வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தற்போது யானைகளின் வலசைக் காலம் என்பதால் மாங்கரை, தடாகம், ஆனைகட்டி ஆகிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கோவையில் இருந்து மாங்கரை வனச்சோதனை சாவடி வழியாக ஆனைகட்டிக்கு சைக்கிளிங்க் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாங்கரையில் இருந்து நான்கு கிலோ மீட்டர் அடர் வனப்பகுதி வழியாக மலைப்பாதை செல்வதால், காலை, மாலை நேரங்களில் அந்தப் பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் சைக்கிளிங்க் செல்வோருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இரவு ஊருக்குள் வரும் யானைகள் காலை நேரத்தில் வனப்பகுதிக்குள் செல்லும்போது சைக்கிளிங் செல்வோருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாகவும், இவ்வாறு சைக்கிளிங் செல்வோரை வனத்துறை சோதனைச் சாவடியிலேயே தடுத்து நிறுத்தினால் மட்டுமே ஆபத்து ஏற்படாமல் தடுக்க முடியும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சரவெடி சத்தம் தெறிக்க… தெறிக்க… வெளியான ‘அண்ணாத்த’ அனைத்து பாடல்கள்!

நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டப் போராட்டம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கனமழை எதிரொலி: எட்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

About Vengai Vetri 297 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*