மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும்; முதல்வர் அறிவிப்புக்கு தமிழிசை வரவேற்பு!

66 / 100

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை வரவேற்பு அளித்துள்ளார்.

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும்; முதல்வர் அறிவிப்புக்கு தமிழிசை வரவேற்பு!

தமிழனின் புகழை உலகறிய செய்த, உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். மேலும், ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது இனிமேல் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் பல ஆண்டுகளாக மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அதை பரிசீலித்து ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாட உத்தரவிடப்படுகிறது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும்; முதல்வர் அறிவிப்புக்கு தமிழிசை வரவேற்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடும் அறிவிப்பிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல், இந்த அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த அறிவிப்பிற்கு, தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றுள்ளார்.

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும்; முதல்வர் அறிவிப்புக்கு தமிழிசை வரவேற்பு!

இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை அரசு விழாவாக கொண்டாட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது உண்மையில் மகிழ்ச்சி. அதே நேரத்தில் 2016-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தை ஆண்ட முன்னாள் முதலமைச்சர் தேவந்திர பட்னாவிஸ் அவர்கள் தலைமையிலான அரசு அங்குள்ள துறைமுகத்திற்கு நம் தமிழ் மன்னரான ராஜேந்திரசோழனின் பெயருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரின் உருவப்படத்தையும் திறந்து பெருமை சேர்த்துள்ளதுள்ளார். அதேபோல மும்பையிலிருந்து லண்டன் செல்லும் ஒரு அரசு விமானத்திற்கு ராஜேந்திர சோழனின் பெயரும் சூட்டப்பட்டது என்பதை மகிழ்வுடன் நினைவு கூர்ந்து பதிவிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*