மீண்டும் ஊரடங்கு: தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- மத்திய அரசு தகவல்

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மீண்டும் ஊரடங்கு: தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- மத்திய அரசு தகவல்

இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.10 கோடியாக உள்ளது. இந்தியாவில் கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், அனைத்து எல்லைகளும் மூடப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.

இந்தநிலையில், வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம். இதனால், கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படுகிறார்கள்.

மீண்டும் ஊரடங்கு: தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- மத்திய அரசு தகவல்

இதையடுத்து, இந்த நடவடிக்கையால் பல மாநிலங்களில் நோய்த் தோற்று வெகுவாக குறைந்து வந்தது. தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

மீண்டும் ஊரடங்கு: தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- மத்திய அரசு தகவல்

இதையடுத்து, புதிதாக உருவான மொத்த பாதிப்பில் 86.36% தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டும் ஏற்பட்டுள்ளது. இதனால், கொரோனா நோய்த் தொற்றை, தடுக்கவேண்டிய நடவடிக்கைகளை கண்காணித்து, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தும் நிலை ஏற்படலாம்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*