மீண்டும் கொங்கு மண்டலத்திற்கே பதவியா? – கொந்தளித்த ஓபிஎஸ்!

57 / 100
மீண்டும் கொங்கு மண்டலத்திற்கே பதவியா? - கொந்தளித்த ஓபிஎஸ்!

அதிமுகவில் நீண்ட காலமாக அவைத்தலைவர் என்ற பொறுப்பை அலங்கரித்த மதுசூதனனின் மறைவுக்கு பிறகு அந்த இடத்தை யாருக்கு கொடுப்பது என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதையடுத்து, அதிமுகவில் சில அதிகாரங்களை கொண்டுள்ள அவைத்தலைவர் என்ற பொறுப்புக்கு கடும் போட்டி எழுந்ததுள்ளது. முதலிலேயே அதிமுகவில் உள்ள இரட்டை தலைமை இருப்பது கட்சிக்குள் காரசாரம் அதிகமாக இருந்துவரும் நிலையில் அடுத்தகட்ட குழப்பம் அவைத்தலைவர் பொறுப்பை வைத்து ஆரம்பித்துள்ளது.

அவைத்தலைவர் போட்டியில் நடப்பது என்ன? என்று அதிமுக தலைமைக்கு நெருக்கமான சிலரிடம் கேட்டோம். மதுசூதனனின் உடல்நிலை நலிவுற்றிருந்த போதே, அதிமுக தலைவர்கள் மத்தியில் அவைத்தலைவர் குறித்த பேச்ச ஆரம்பித்தார்கள்.

தற்போது அவைத்தலைவர் பதவிக்கு போட்டி ஏற்படக் காரணம், அதிமுகவின் இரட்டை இலை குறித்த வழக்கில் தேர்தல் ஆணையம் அவைத்தலைவர் இருக்கும் அணிக்கே சின்னத்தை வழங்கியது. அதேபோல, பொதுக்குழு முதல் அதிமுகவின் முக்கிய நிர்வாக கூட்டங்கள் அனைத்தும் அவைத்தலைவர் அனுமதி பெற்றபின்பே நடக்கும்.

மீண்டும் கொங்கு மண்டலத்திற்கே பதவியா? - கொந்தளித்த ஓபிஎஸ்!

இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் ஒற்றை தலைமையாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் பார்க்கிறார். அதற்கு மிகவும் முக்கியமானது அவைத்தலைவரின் ஆதரவு. அதனால்தான் அவைத்தலைவர் பதவியை தனக்கு நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு வழங்கினால் எதிர்காலத்தில் தனக்கு சாதகமாக இருக்கும் என்று கணக்கு போடுகிறார்.

மேலும், கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களாக இருப்பது கூடுதல் தகுதியாக இருக்குமென்று எடப்பாடி பழனிச்சாமி பார்க்கிறார். அவைத்தலைவர் பொறுப்பு என்பது கட்சியின் சீனியர்களாக இருப்பவர்களுக்கு வழங்கப்படும் பொறுப்பாக இருக்கிறது.

இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமியை விட அதிமுகவில் சீனியர்கள் பலரும் இருக்கிறார்கள். அவர்களில் இருவரை தனது சாய்ஸாக நினைத்துள்ளார். முன்னாள் சபாநாயகர் தம்பிதுரையும், அடுத்ததாக முன்னாள் அமைச்சர் பொன்னையன். இந்த இருவருமே எம்ஜிஆர் காலத்து ஆட்கள். இருவரும் அதிமுகவில் சீனியர்கள் என்பதால் இவர்களை நியமிக்க எந்த இடையூறும் வராது என்று எடப்பாடி பழனிச்சாமி கணக்கு போடுகிறார். இவர்கள் இருவருமே கொங்கு மண்டலத்தில் கொங்கு சமூகத்தினர் என்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு கூடுதல் பலம்.

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணத்திற்கு மாறாக ஓ.பன்னீர்செல்வத்தின் திட்டம் இருக்கிறது என்கிறார்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர். அவைத்தலைவர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் வசம் ஒப்படைத்துவிட்டு, பொதுச்செயலாளர் பதவியில் தான் அமரலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டார்.

மீண்டும் கொங்கு மண்டலத்திற்கே பதவியா? - கொந்தளித்த ஓபிஎஸ்!

ஆனால், கட்சியின் தலைமை பதவியிலிருந்து தான் விலகபோவதில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக சொல்லிவிட்டார். அதேபோல் மதுசூதனன்- ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தான் இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. எனவே அவைத்தலைவர் பதவி தன்னைவிட்டு போய்விடக்கூடாது என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவில் சீனியர்களான இருவரை இந்த பொறுப்புக்கு பரிந்துரை செய்ய நினைக்கிறார். தமிழ்மகன் உசேன், அன்வர் ராஜா ஆகிய இருவரில் ஒருவரை அவைத்தலைவராக கொண்டுவரலாம் என்று எண்ணுகிறார் என்கிறார்கள்.

இந்நிலையில், மதுசூதனன் வீட்டில் அஞ்சலி செலுத்தியப்பிறகு ஓ.பன்னீர்செல்வம் தனக்கு நெருக்கமானவர்களுடன் தனது வீட்டில் பேசியுள்ளார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி என்ன நினைச்சுக்கிட்டு இருக்கார். எல்லா பொறுப்பையும் அவங்க ஆளுங்களுக்கே கொடுக்குமா?அவைத்தலைவர் பதவியையும் கொங்கு மண்டலத்து ஆளுக்கே கொடுத்தா இது என்ன கொங்கு கட்சியா?. எடப்பாடி பழனிச்சாமி செய்வது ஒண்ணும் சரியில்லை. என்னிடம் எதுவும் கேட்காமல் எடப்பாடி பழனிச்சாமி எந்த முடிவெடுத்தாலும் அதற்கு நான் ஒத்துக்க மாட்டேன் என்று கொந்தளித்துள்ளார். இதனால், அதிமுகவில் அவைத்தலைவர் போட்டியில் இன்னும் சில தினங்களில் அனல் பறக்கும் என்கிறார்கள் அதிமுகவின் தொண்டர்கள்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*