மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு : தீவிரமாகிறது கட்டுப்பாடுகள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

11 / 100

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு : தீவிரமாகிறது கட்டுப்பாடுகள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 1,997பேருக்கு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25-லட்சத்து 69-ஆயிரத்து 398-ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல, தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34-ஆயிரத்து 230-ஆக இருக்கிறது. இதனால், மீண்டும் தமிழ்நாட்டுல் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகமாகி வருகிறது. ஆகையால், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு : தீவிரமாகிறது கட்டுப்பாடுகள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

இந்தநிலையில், கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கடுமையான கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய சூழலை பொதுமக்கள் ஏற்படுத்திட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்த நிலையில் தற்போது, முழு ஊரடங்கு அமல்படுத்தவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*