மீண்டும் வருகிறது ஊரடங்கு?: தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

மீண்டும் வருகிறது ஊரடங்கு?: தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பது பற்றி தலைமை செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மீண்டும் வருகிறது ஊரடங்கு?: தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பெரும் பாதித்துள்ளன நாடுகளில், இந்தியாவிற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் பல உயிர்களை இரையாக்கியது. கொரோனாவால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தற்போது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதையடுத்து, பல்வேறு கட்டுப்பாட்டுகளால் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று படிப்படியாக குறைந்தது. இதனால், இந்தியா முழுவதும் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தில் இயல்புநிலை திரும்பியது. இந்தநிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு 300 க்கு குறைவானவர்களே பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், கடந்த 24 மணி நேரத்தில், 836 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து, 60 ஆயிரத்து, 572 பேராக உயர்ந்துள்ளது.

மீண்டும் வருகிறது ஊரடங்கு?: தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

இதையடுத்து, இதுவரை 12,551 கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். சென்னையை பொருத்தவரையில் அதிகபட்சமாக 317 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் செங்கல்பட்டில் கொரோனா தொற்று 81 பேருக்கும் கோவையில் கொரோனா தொற்று 70 பேருக்கும் இருப்பது உறுதியானது. இதனால், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவுவதால் மக்கள் மத்தியில் அச்சம் எழ தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் காணொலி வாயிலாக அவசர ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் 24 மணிநேரத்தில் 800-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், இன்று தலைமைச்செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதன் மூலம் மீண்டும் கொரோனா தொற்றை தடுப்பது எப்படி? பொதுமுடக்கம் அமல்படுத்தலாமா? அல்லது இந்த வார இறுதியில் ஊரடங்கு கொண்டுவருவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் பரவும் அவசரச் செய்தி அரசு மருத்துவமனை டீன் அவர்கள் கூறிய தகவல் மிகவும் எச்சரிக்கையுடன் இருங்கள்

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*