முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் எப்புடி…!!!

முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் எப்புடி...!!!
63 / 100

திருச்சிராப்பள்ளி அருகே சிறுகனூரில் 750 ஏக்கர் நிலபரப்பில் திமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அங்கே நடப்பது திமுகவின் 11வது மாநில மாநாடுதான் என்று சொல்லவேண்டும். ஆனால்,பொதுக்கூட்டம் என்ற பெயரில் நடந்து வருகிறது.

முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் எப்புடி…!!!

நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 2 லட்சம் பேர் அமர்வதற்கான இருக்கைகள் போடப்பட்டுள்ளன. திமுக தொண்டர்களின் கார், வேன், லாரிகள், பேருந்துகள் நிறுத்துவதற்காக 300 ஏக்கர் பரப்பளவில் இடம் அமைக்கப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில் காங்கிரசுடன் தொகுதிப்பங்கீட்டு இறுதி பேச்சுவார்த்தையில் இருந்த ஸ்டாலின் அதை முடித்துவிட்டு, இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனி விமானத்தில் திருச்சி சென்றார். பொதுக்கூட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 90 அடி உயர கொடிகம்பத்தில் கொடியேற்றி வைத்து பொதுக்கூட்டத்தினை தொடங்கிவைத்தார் ஸ்டாலின்.

அந்தப் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட்கள்தான் உறுத்தலாக இருக்கின்றன என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் எப்புடி…!!!

இதுகுறித்து பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம், ‘பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் படங்களை தவிர வேறு யார் படத்தையும் போடக்கூடாது என கட்சியினருக்கு உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின் அவர்களே, திருச்சியெங்கும் உதவாத நிதியின் கட்-அவுட்டுகள் மக்களின் கண்ணை உறுத்துகிறதே, மக்கள் கண்ணை மூடிகொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்கிறார்.

மேலும், உங்கள் குடும்பத்தையும் மகனையும் கட்டுப்படுத்த முடியாத நீங்கள், நல்லாட்சி தரப்போகிறேன் என்பது வேடிக்கை! என்றும் அவர் சாடுகிறார்.

எதிர்க்கட்சியினரின் விமர்சனம் இப்படி என்றால், இந்த கட் -அவுட்களை எல்லாம் பார்த்த திமுகவினர், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்’ என்று முழக்கமிட்டுச் செல்கிறார்கள்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*