முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்: முதல்வராய் மகிழ்கிறேன், கலைஞரின் மகனாய் நெகிழ்கிறேன்!

13 / 100

கலைஞர் மு.கருணாநிதி உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்ததைக் கண்டு கலைஞரின் மகனான நெகிழ்கிறேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்: முதல்வராய் மகிழ்கிறேன், கலைஞரின் மகனாய் நெகிழ்கிறேன்!

தன் வாழ்நாளில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக சட்டமன்றத்தில் இருந்த மாபெரும் தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் உருவப்படம் தமிழக சட்டபேரவையில் திறக்கப்பட்டது. இன்று புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த விழாவில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தமிழக முதல்வராக 5 முறையும், சட்டமன்ற உறுப்பினராக 13 முறையும் இருந்தவர். சீர்திருத்த சட்டங்களை இயற்றி தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள். தமிழக முதலமைச்சர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர், தமிழக அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் என்று பல பதவிகளை வகித்தவர் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி. சமூக நீதிக்காக பாடுபட்டவர் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி. தமிழ்நாட்டு மக்களை தன் காந்தக் குரலால் கட்டிப்போட்டவர் என்று மு.கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்: முதல்வராய் மகிழ்கிறேன், கலைஞரின் மகனாய் நெகிழ்கிறேன்!

மேலும், தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை நிலை நாட்டப்பட்ட மாபெரும் வளாகம் இது. தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள், இன்றைய நாள். தமிழக மக்களின் நலன் காக்க இந்த சட்டப்பேரவை, தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட இந்த சட்டப்பேரவையில்தான் தீர்மானம் நிறைவேறியது. சட்டப்பேரவையின் வைரவிழா மு.கருணாநிதி தலைமையில் கொண்டாடப்பட்டது. மகளிருக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்றப்பட்டது என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்: முதல்வராய் மகிழ்கிறேன், கலைஞரின் மகனாய் நெகிழ்கிறேன்!

மேலும், கலைஞர் மு.கருணாநிதி படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்ததை பார்த்து முதல்வராய் மகிழ்கிறேன், கலைஞரின் மகனாய் நெகிழ்கிறேன் என்று உருக்கமாக பேசி விடைபெற்றார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*