முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

71 / 100
முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 59 குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 59 குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

அதன் பிறகு சசிகலா பசும்பொன் புறப்பட்டு சென்றார். வழிநெடுக திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி, பார்த்திபனூர், கமுதி உள்ளிட்ட பல பகுதிகளிலும் சசிகலாவுக்கு தன் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் மணிமண்டபத்தில் இருக்கும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். வி.கே.சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஓபிஎஸ் கூறிய கருத்திற்கு அதிமுகவில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில் வி.கே.சசிகலா இன்று மேற்கொள்ளும் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் பிரச்சார வாகனத்தில் வந்து தேவர் சிலைக்கு மரியாதை செய்த சசிகலா

வி.கே.சசிகலா மேற்கொள்ளும் இந்த பயணத்தில் அதிமுக கொடி கட்டிய ஜெயலலிதா பயன்படுத்திய பரப்புரை வாகனத்தில் பயணித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

முன்னதாக மதுரை ஓட்டலில் தங்கி இருந்த வி.கே.சசிகலாவை அதிமுகவின் மதுரை 27வது வட்ட செயலாளர்கள் கே.எம்.கண்ணன், ரவிக்குமார், 46வது வார்டு பொருளாளர் நாகராஜ், 27வது வட்ட பிரதிநிதி ராஜா, துணைச் செயலாளர் ஆசைப்பாண்டியன், 46வது வார்டு பொருளாளர் நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

அதேபோல் நெல்லை, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த சில அதிமுக நிர்வாகிகளும் வி.கே.சசிகலாவை சந்தித்தனர்.

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

பின்னர் அவர்கள் கூறுகையில், அதிமுகவை வலிமையாக நடத்த வி.கே.சசிகலாவால்தான் முடியும். அவர் வழிநடத்தினால்தான் அதிமுகவை காப்பாற்ற முடியும். அவரது தலைமையில் அனைவரும் ஒன்று சேரவேண்டும். வி.கே.சசிகலா தான் நிரந்தர பொதுச்செயலாளர். அவர் வந்தால் தான் வருகிற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றியை சந்திக்கும் என்றனர்.

மதுரையில் அதிமுக நிர்வாகிகள் வி.கே.சசிகலாவை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக மேலிடம் முடிவு செய்துள்ளது.

சரவெடி சத்தம் தெறிக்க… தெறிக்க… வெளியான ‘அண்ணாத்த’ அனைத்து பாடல்கள்!

நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டப் போராட்டம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கனமழை எதிரொலி: எட்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

About Vengai Vetri 297 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*