மெளனம் கலைக்கும் சசிகலா: எம்.ஜி.ஆர். நினைவு இல்லம், ஜெ.வின் நினைவிடத்தில் அஞ்சலி!

57 / 100

சென்னை அக். 06.,

மெளனம் கலைக்கும் சசிகலா: எம்.ஜி.ஆர். நினைவு இல்லம், ஜெ.வின் நினைவிடத்தில் அஞ்சலி!

பெங்களூர் சிறையிலிருந்து விடுதலையான பிறகு சென்னை வந்த சசிகலா, ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் செல்வதாக இருந்தது. ஆனால், இதுவரை அவர் செல்லவில்லை. சில மாதங்களாக அமைதியாக இருந்தநிலையில், மீண்டும் அரசியல் பணிகளைத் துவக்கவிருக்கிறார். அக்டோபர் 17ஆம் தேதி அதிமுகவின் 50வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, வெளியே வருகிறார் சசிகலா.

மெளனம் கலைக்கும் சசிகலா: எம்.ஜி.ஆர். நினைவு இல்லம், ஜெ.வின் நினைவிடத்தில் அஞ்சலி!

இந்நிலையில், அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு வருகிற 16-ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு செல்கிறார் சசிகலா. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உருக்கமாகப் பிரார்த்தனை செய்கிறார். மறுநாள் 17-ஆம் தேதி, தி.நகரில் இருக்கும் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்துக்குச் செல்லும் சசிகலா, ராமாவரத்திலுள்ள எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீட்டிற்கும் செல்கிறார்.

மெளனம் கலைக்கும் சசிகலா: எம்.ஜி.ஆர். நினைவு இல்லம், ஜெ.வின் நினைவிடத்தில் அஞ்சலி!

அங்கு அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கிவிட்டு, எம்.ஜி.ஆரின் காது கேளாத பள்ளிக் குழந்தைளுக்குப் பல நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் சசிகலா! அந்தக் குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. தி.நகர் மற்றும் ராமாவரம் நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அமமுகவின் முன்னாள் தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் என்.வைத்தியநாதனிடம் ஒப்படைத்திருக்கிறார் சசிகலா! சசிகலாவின் வருகையை அமர்க்களப்படுத்த தடபுடல் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மெளனம் கலைக்கும் சசிகலா: எம்.ஜி.ஆர். நினைவு இல்லம், ஜெ.வின் நினைவிடத்தில் அஞ்சலி!

அதிமுக பிறந்தநாளில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கும் எம்.ஜி.ஆர் இல்லத்துக்கும் செல்லும் சசிகலா, எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக அதிரடி ஸ்டேட்மெண்ட் கொடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*