ரூ.10 லட்சம் நிவாரண உதவி; புதுக்கோட்டை மீனவர் குடும்பத்திற்கு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

60 / 100
ரூ.10 லட்சம் நிவாரண உதவி; புதுக்கோட்டை மீனவர் குடும்பத்திற்கு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

இலங்கை கடற்படையினரால் உயிரிழந்த புதுக்கோட்டை மீனவர் ராஜ்கிரண் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

புதுக்கோட்டை அக். 23.,

புதுக்கோட்டை : கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 18.10.2021 அன்று என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மூன்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டதால் மீனவர்கள் சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியது.

இந்நிலையில், அவர்களை மீட்டுத் தருமாறு தமிழ்நாடு முதலமைச்சர், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார். மேற்படி மூன்று மீனவர்களில் சுகந்தன் (22), சேவியர் (38) ஆகிய இரு மீனவர்கள் இலங்கையின் கடற்படை வசம் இருந்தனர். மற்றொரு மீனவரான ராஜ்கிரண் (28) என்பவர் இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டார்.ரூ.

10 லட்சம் நிவாரண நிதி

இதையடுத்து, உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், அவரது குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார் .

சரவெடி சத்தம் தெறிக்க… தெறிக்க… வெளியான ‘அண்ணாத்த’ அனைத்து பாடல்கள்!

நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டப் போராட்டம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கனமழை எதிரொலி: எட்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

About Vengai Vetri 297 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*