ரூ.1374 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் ; ரூ.1,791 கோடியில் தாலிக்கு தங்கம்: இடைக்கால பட்ஜெட் அறிவிப்புகள்!

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இடைக்கால பட்ஜெட்டை இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்தார்.

ரூ.1374 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் ; ரூ.1,791 கோடியில் தாலிக்கு தங்கம்: இடைக்கால பட்ஜெட் அறிவிப்புகள்!

தாக்கல் செய்ததில், வேளாண் துறைக்கு ரூ.11,982 கோடி ஒதுக்கீடு. மேலும், சுகாதாரத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.19,420 கோடி ஒதுக்கீடு. விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ரூ. 5ஆயிரம் ஒதுக்கீடு போன்ற முக்கிய அறிவிப்புக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்த நிலையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் ரூ.3,016 கோடி செலவில் 40லட்சம் இணைப்புகள் அளிக்கப்படும்.

2,749 சமூக சுகாதார வளாகங்கள் ரூ.144.33 கோடி நிதியில் கட்டப்பட்டு வருகின்றன.

பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் மேற்கூரை அமைப்பதற்கான மானியம் ரூ.70 ஆயிரமாக உயர்வு.

ரூ.1374 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் ; ரூ.1,791 கோடியில் தாலிக்கு தங்கம்: இடைக்கால பட்ஜெட் அறிவிப்புகள்!

ரூ.1374 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளுக்கு ஒதுக்கீடு.

கல்லணை கால்வாய் புனரமைப்பு, நவீனப்படுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.

சரபங்கா நீரேற்று திட்டம், அத்திகடவு-அவினாசி திட்டம் விரைவில் நிறைவுபெறும்.

கடந்த 10 ஆண்டுகளில் திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் இதுவரை 12.50 லட்சம் பேருக்கு ரூ.1,791 கோடியில் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.

திருமண உதவித்திட்டத்தில் ரூ.4,371 கோடி நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.

தலைவாசலில் அமைக்கப்படுகிற, சர்வதேச தரத்திலான கால்நடை பூங்காவிற்கு கூடுதலாக ரூ.634.87 கோடி நிதி ஒதுக்கீடு.

இயற்கைபேரிடரில் பாதிக்கப்படும் நெல்லுக்கான நிவாரணம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,000ல் இருந்து ரூ.20,000ஆக உயர்வு.

தமிழகத்தில் 15,900 ஹெக்டேர் அளவில் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது.

ரூ.1374 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் ; ரூ.1,791 கோடியில் தாலிக்கு தங்கம்: இடைக்கால பட்ஜெட் அறிவிப்புகள்!

மரங்களின் பல்லுயிர்த் தன்மையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு காப்பீட்டு தொகை 4 லட்சமாக இருந்தது 5 லட்சமாக உயர்வு; குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு 10லட்சம் காப்பீட்டு தொகை.

இளைஞர்கள் நலனுக்கு ரூ.229.37 கோடி ஒதுக்கீடு.

தமிழக காவல்துறையை நவீனமயமாக்க பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*