வன்னியர் இடஒதுக்கீடுக்கு 10.5% : அப்போ 22 சாதிகளுக்கு 2.5% தானா? –கிளம்பியது சட்டப்போராட்டம்!

வன்னியர் இடஒதுக்கீடுக்கு 10.5% : அப்போ 22 சாதிகளுக்கு 2.5% தானா? –கிளம்பியது சட்டப்போராட்டம்!

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இருந்த 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5% உள்ஒதுக்கீடு வழங்கி பிப்ரவரி 26ஆம் தேதி சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

வன்னியர் இடஒதுக்கீடுக்கு 10.5% : அப்போ 22 சாதிகளுக்கு 2.5% தானா? –கிளம்பியது சட்டப்போராட்டம்!

இது ஆறு மாதம் வரையே செல்லுபடியாகும். அதற்குப் பின் மாற்றம் கொண்டுவரப்படும் என அரசு தெரிவித்தது. இந்தச் சட்டத்தை வன்னியர்களின் தரப்பில் வரவேற்றாலும் 2.5% இடஒதுக்கீட்டுக்குள் வரும், மற்ற சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இந்தநிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து தென்னாடு மக்கள் கட்சி நிறுவனர் கணேசன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அம்மனுவில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20% இடஒதுக்கீட்டில் வன்னியர், வன்னிய கவுண்டர், வன்னியர்குல சாஸ்திரியர் என 7 பிரிவினருக்கு 10.5% வழங்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

வன்னியர் இடஒதுக்கீடுக்கு 10.5% : அப்போ 22 சாதிகளுக்கு 2.5% தானா? –கிளம்பியது சட்டப்போராட்டம்!

சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளதால் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு முடிக்காமல் எப்படி இந்தச் சட்டம் இயற்றப்பட்டது என்று தெரியவில்லை.

20% இடஒதுக்கீட்டில் சீர் மரபினருக்கு 7.5% இடஒதுக்கீடு போக வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்டுள்ள பிரிவுகளில் உள்ள இன்னபிற 22 சாதிகளுக்கு வெறும் 2.5% இடஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும்.

வன்னியர் இடஒதுக்கீடுக்கு 10.5% : அப்போ 22 சாதிகளுக்கு 2.5% தானா? –கிளம்பியது சட்டப்போராட்டம்!

இதில், உண்மையாகவே வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால், அதனை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் லாபத்திற்காக இந்தச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.

இந்தச் சட்டத்தின் அடிப்படையில், தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் எனத் தெரிகிறது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*