வன்னியர் கூட்டமைப்பு தலைவரை நாய் என்று சொன்ன ராமதாசுக்கு கடும் கண்டனம்

வன்னியர் கூட்டமைப்பு தலைவரை நாய் என்று சொன்ன ராமதாசுக்கு கடும் கண்டனம்

சட்டப்பேரவை தேர்தல்-2021ஐ முன்னிட்டு பாமக தேர்தல் அறிக்கை வெளியீட்டின்போது நடந்த கூட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக ராமதாஸ் பேசினார். அப்போது ஒரு பாமக இளைஞர், ‘இட ஒதுக்கீட்டில் 2010ல் வன்னியர் கூட்டமைப்போட தலைவர் சி.என்.ராமமூர்த்தி தொடர்ந்த வழக்கின் அடிப்படையில்தான் ஜனார்த்தன ரெட்டி பரிந்துரையை ஏற்று தமிழக அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. என்னுடைய முயற்சியை ராமதாசும், பாமகவும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள் என்று அவர்கள் சொல்கிறார் என்று கேட்டார்.

வன்னியர் கூட்டமைப்பு தலைவரை நாய் என்று சொன்ன ராமதாசுக்கு கடும் கண்டனம்

அதற்கு பதிலளிக்க உடனே அன்புமணி காணொளி வாயிலாக இணைப்பில் வந்து பதில்கொடுக்க முயன்றார். அன்புமணியை இடைமறித்த ராமதாஸ், ‘ஏதோ ஒரு நாய் பேர சொல்லி… என்று ஆத்திரத்தில் தடுமாறினார். பின்னர், ‘’ஏண்டா வரலாறு தெரியாம ஏதோ ஒரு நாய் பேர சொல்லுற இந்த கூட்டத்துல. உனக்கு வெட்கமாயில்ல..! இந்ததேர்தல் முடியட்டும் அப்புறம் பாருங்க..! என்று கர்ஜித்துவிட்டு நாய் என்று சொன்ன ராமதாசுசிரிக்க, கூட்டத்தினர் கைதட்டி ஆர்ப்பரிக்கின்றனர்.

அன்று நடந்த வீடியோவினை பகிர்ந்த வாழப்பாடி ராம சுகந்தன், வன்னியர் கூட்டமைப்பு தலைவர் நண்பர் CN இராமமூர்த்தி அவர்களை, ஒருமையிலும் நாய் என்று அநாகரிகமாக விமர்சித்த ராமதாஸின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

வன்னியர் கூட்டமைப்பு தலைவரை நாய் என்று சொன்ன ராமதாசுக்கு கடும் கண்டனம்

தருமபுரி திமுக எம்.பி டாக்டர் செந்தில்குமார், ‘வன்னியர் உள்ஒதுக்கீடுக்காக 2010லில் CN இராமமூர்த்தி வழக்கு தாக்கல் செய்தார். MBC உள்ஒதுக்கீடு குறித்து 2012லில் ஜனார்த்தனன் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. 2013லில் நீதியரசர் கவுல் ஒரு மாதத்திற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டும் தமிழக அரசு பதிலளிக்கவில்லை. இப்படி உழைத்தவரைத்தான் அநாகரிகமாக நாய் என்று சொல்கிறார் ராமதாஸ். என்று தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*