வரும் 12ஆம் தேதி அமமுக தேர்தல் அறிக்கை: அதிமுக, திமுகவிற்கு மாற்றாக இருக்குமா?

அமமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும் – டிடிவி தினகரன்

வருகிற 12ஆம் தேதி அமமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

வரும் 12ஆம் தேதி அமமுக தேர்தல் அறிக்கை: அதிமுக, திமுகவிற்கு மாற்றாக இருக்குமா?

இதையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் லட்சியக் கனவுகளை வென்றெடுக்கப் போராடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியீட்டு, சிறப்பு பொதுக்கூட்டம் வருகிற 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில், சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெற உள்ளது.

வரும் 12ஆம் தேதி அமமுக தேர்தல் அறிக்கை: அதிமுக, திமுகவிற்கு மாற்றாக இருக்குமா?

இதில், கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அவர்கள் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். இப்பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்று உரையாற்ற உள்ளார்கள்.

வரும் 12ஆம் தேதி அமமுக தேர்தல் அறிக்கை: அதிமுக, திமுகவிற்கு மாற்றாக இருக்குமா?

இந்தநிலையில், நடக்கவிருக்கும் கூட்டத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மற்றும் பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்டம், ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் என அனைவரும் கொரோனா கால வழிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து போதிய சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*