வரும் 8ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதி

உலகளவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றானது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் பார்க்கும்போது கொரோனா நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

வரும் 8ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதி

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மத்திய அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. அதனால், தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டது.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், ஜனவரி 19-ஆம் தேதி திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 9,11ஆம் வகுப்பு பள்ளிகள், விடுதிகள் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டியிருக்கிறது.

வரும் 8ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதி

இந்நிலையில், பள்ளிகள் விடுதிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அறிக்கையில், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

இட நெருக்கடிகளை தவிர்க்க, காலை மற்றும் பிற்பகல் என்று வகுப்புகளை பிரித்து நடத்தவேண்டும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், மாணவர்களின் எண்ணிக்கையை பிரித்து, வகுப்புகளுக்கு ஒருநாள் விட்டு, ஒருநாள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வகுப்புகள் ஒருநாள் விட்டு, ஒருநாள் அல்லது காலை முதல் மதியம் வரை மத்தியாம் முதல் மாலை வரை என சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோய்த் தொற்றின் அபாயம் இருக்காது எனவும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*