வானதி சீனிவாசனுக்கு கோவை வேண்டாம்: சுடும் வெயிலிலும் தரையில் உருண்டு பிரண்டு கோரிக்கை

வானதி சீனிவாசனுக்கு கோவை வேண்டாம்: சுடும் வெயிலிலும் தரையில் உருண்டு பிரண்டு கோரிக்கை

வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு 20 சீட்டுகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. அந்த 20 தொகுதிகளைக் கண்டறியும் பணியில் இரு கட்சிகளும் இறங்கியுள்ளன. சமூக வலைத்தளங்களில் சில நாட்களுக்கு முன்பு, உத்தேசமாக வெளியான பட்டியலில் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கெனவே, மக்களவை தேர்தலில் கோவையை பாஜகவுக்கு ஒதுக்கி மண்ணைக் கவ்வியது.

வானதி சீனிவாசனுக்கு கோவை வேண்டாம்: சுடும் வெயிலிலும் தரையில் உருண்டு பிரண்டு கோரிக்கை

இந்தநிலையில், அதிமுகவினர் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்தநிலையில், தற்போது, கோவை தெற்கு தொகுதியில், வானதி சீனிவாசன் போட்டியிடுவதாகத் தகவல் வெளியானவுடன் அதிமுகவினர் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர்.

இன்னும் சில தினங்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிடவிருப்பதால், அதற்கு முன்பே அந்தத் திட்டத்தைக் கலைக்கும் வகையில், கோவையிலுள்ள அதிமுக அலுவலகத்துக்கு தொண்டர்கள் வந்தனர். கோவை தெற்கு தொகுதி அதிமுகவுக்கே வேண்டும் வேண்டும் என கோஷங்களுடன் எச்சரிக்கை விடுத்தனர். அதையும் மீறி பாஜகவிற்கு கொடுத்தால், நாங்கள் கூண்டோடு ராஜினாமா செய்வோம் என்று கூறியுள்ளனர்.

வானதி சீனிவாசனுக்கு கோவை வேண்டாம்: சுடும் வெயிலிலும் தரையில் உருண்டு பிரண்டு கோரிக்கை

அந்த கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட தொண்டர் ஒருவர், சட்டையைக் கழற்றி, சுடும் வெயிலிலும் தரையில் உருண்டு பிரண்டு கோரிக்கை வைத்ததார். அதைப் பார்த்தவர்களின் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது. இதைக் கண்டால் எடப்பாடி பழனிச்சாமி கண்ணில் ரத்தமே… வரலாம்.

ஆதலால், இத்தொகுதியைக் பாஜகவிற்கு கொடுக்க அவர் யோசிப்பார் என்றே தெரிகிறது. தேமுதிக விலகிய சோகம் அடங்குவதற்கு முன்பு, இப்படியொரு சோதனை எடப்பாடியின் தலையின் மேல் இடியாய் இறங்கியிருக்கிறது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*