வால்பாறையை உருவாக்கியவர் கார்வர்மார்ஷ்: அவருடைய சிலை அமைக்கப்பட்ட வளாகம் புதுப்பிப்பு | Valparai Carvermarsh statue

வால்பாறையை உருவாக்கியவர் கார்வர்மார்ஷ்: அவருடைய சிலை அமைக்கப்பட்ட வளாகம் புதுப்பிப்பு

வால்பாறையை உருவாக்கிய கார்வர்மார்ஷ் சிலை பராமரிப்பு பணி நடந்து வருகிறது.

வால்பாறை, பிப்..26.,

வால்பாறையை உருவாக்கியவர் கார்வர்மார்ஷ்: அவருடைய சிலை அமைக்கப்பட்ட வளாகம் புதுப்பிப்பு | Valparai Carvermarsh statue

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குவது வால்பாறை. பூமியின் ஏழாவது சொர்க்கமாக வர்ணிக்கப்படும் வால்பாறை. பச்சை போர்வையை போர்த்தியதுபோல் எங்கு பார்த்தாலும் பச்சை நிறம் மட்டுமே காட்சியளிக்கும் மலைகள்.

வால்பாறையை உருவாக்கியவர் கார்வர்மார்ஷ்: அவருடைய சிலை அமைக்கப்பட்ட வளாகம் புதுப்பிப்பு | Valparai Carvermarsh statue

எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று இருக்கும் தேயிலை, காபி தோட்டங்கள் என சொர்க்கம் போல இருக்கிறது வால்பாறை. எதற்கும் ஈடாகாத இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா மையம் வால்பாறை. வால்பாறையில் பார்த்து மகிழ பல இடங்கள் இருக்கிறது. இந்தப் பகுதியை வால்பாறையை ஆங்கிலேயர்கள்தான் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.

வால்பாறையை உருவாக்கியவர் கார்வர்மார்ஷ்: அவருடைய சிலை அமைக்கப்பட்ட வளாகம் புதுப்பிப்பு | Valparai Carvermarsh statue

வால்பாறை பகுதியை உருவாக்கிய கார்வர்மார்ஷ் என்ற ஆங்கிலேய தோட்ட அதிகாரி, பூனாச்சி என்ற ஆதிவாசியுடன் சேர்ந்து வால்பாறைக்கு சென்று அங்கு காபி தோட்டங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

இந்தபணி முடிந்த பின்னர்தான் வால்பாறை என்ற மலைப்பிரதேசம் வெளியுலகுக்கு வந்தது. அவர் கடந்த 1934ஆம் ஆண்டு இறந்து விட்டார். அவரை நினைவு கூறும் வகையில், கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் கார்வர்மார்சின் சிலை அமைக்கப்பட்டது. அவருடைய சிலை அமைக்கப்பட்ட வளாகம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்தது.

வால்பாறையை உருவாக்கியவர் கார்வர்மார்ஷ்: அவருடைய சிலை அமைக்கப்பட்ட வளாகம் புதுப்பிப்பு | Valparai Carvermarsh statue

இந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சிலர் சிலை உள்பட பல்வேறு பகுதிகளை சேதப்படுத்தினார்கள். எனவே அதை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் நடவடிக்கை எடுத்ததால், இந்த சிலை வளாகம் முழுவதும் சீரமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

வால்பாறையை உருவாக்கியவர் கார்வர்மார்ஷ்: அவருடைய சிலை அமைக்கப்பட்ட வளாகம் புதுப்பிப்பு | Valparai Carvermarsh statue

மேலும், சிலை வளாகத்தில் யாரும் உள்ளே செல்லாதவாறு, தடுக்க கம்பிகள் அமைக்கும் பணியும், தேயிலை தோட்டங்கள், இயற்கை பகுதியை பார்த்து மகிழ பார்வையாளர் மாடம் அமைக்கும் பணியும் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்த வளாகம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் கிடந்த, இந்த சிலை வளாகத்தை, பராமரிக்க நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் நடவடிக்கை எடுத்ததால், தற்போது பணிகள் நடந்து வருகிறது. நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினார்கள்.

About Vengai Vetri 297 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*