வால்பாறை நகராட்சி ஆணையர் மீது தற்காலிக பணியாளர் பெண் புகார்

65 / 100

வால்பாறை நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் மீது அங்கே தற்காலிகமாக பணிபுரியும் சுமிதா ஶ்ரீ என்ற பெண் ஊழியரை தகாத வார்த்தைகளால் வால்பாறை நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் பேசியதாகவும் அலுவலக உதவியாளரை அழைத்து தன்னை கையை பிடித்து இழுத்துவந்து வெளியே தள்ளிவிட்டதாகவும், கீழே தள்ளியதில் தனக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் சுமிதா ஶ்ரீ தெரிவித்துள்ளார்.

வால்பாறை நகராட்சி ஆணையர் மீது தற்காலிக பணியாளர் பெண் புகார்

மேலும் கூறுகையில், மயக்கமடைந்து இருந்தபோது தன்னை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். தனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்று கூறினார்.

வால்பாறை நகராட்சி ஆணையர் மீது தற்காலிக பணியாளர் பெண் புகார்

வால்பாறை காவல் நிலையத்தில் வால்பாறை D.S.P. திரு. சீனிவாசன், காவல் ஆய்வாளர் திருமதி. கற்பகம் புகார் கொடுக்கப்பட்டது. சுமிதா ஶ்ரீயிடம் தனியாக விசாரணை நடத்தப்பட்டதாகவும், இரவு நேரமாகிவிட்டதால் மறுநாள் விசாரிப்பதாக தெரிவித்ததாக கூறினார்.
சுமிதா ஶ்ரீயுடன் வால்பாறை வழக்கறிஞர் மா.விஸ்வநாதன் உடனிருந்தார்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*