வால்பாறை அருகே காயங்களுடன் பிடிபட்ட குட்டி ஆண் புலி: வனத்துறையினர் தீவிர சிகிச்சை… தாய் புலி நடமாட்டமா ?

60 / 100

வால்பாறை செப்.30.,

வால்பாறை அருகே பிடிபட்ட காயங்களுடன் பிடிபட்ட குட்டி ஆண் புலி. புலியின் காயங்களுக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்தப்பகுதியில் தாய் புலி நடமாட்டம் குறித்து கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

வால்பாறை அருகே முடீஸ் பஜாரில் உடல் சோர்வுற்ற புலி ஒன்று நடமாடி வந்தது. இதுபற்றிய தகவலறிந்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியன், துணை கள இயக்குனர் கணேசன் ஆகியோர் தலைமையில் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவில் முடீஸ் எஸ்டேட் அலுவலக பின்புறம் பதுங்கி இருந்த புலியை வலை மூலம் பிடித்தனர்.

வால்பாறை அருகே காயங்களுடன் பிடிபட்ட குட்டி ஆண் புலி: வனத்துறையினர் தீவிர சிகிச்சை… தாய் புலி நடமாட்டமா ?

தொடர்ந்து அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் உள்ள வனத்துறையின் மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு மையத்திற்கு புலியை கொண்டு வந்து, கூண்டில் அடைத்து அதன் காயங்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றார்கள்.

இதுபற்றி வனத்துறையினர் கூறியதாவது:- காயங்களுடன் பிடிபட்ட ஆண் புலி பிறந்து 8 மாதங்கள் இருக்கலாம். மற்ற வனவிலங்குகளுடன் சண்டையிட்டதில் பிடிபட்ட ஆண் புலிக்கு உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, பிடிபட்ட புலிக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, உடல் வலி மருந்து, உடலுக்கு சக்தி தரக்கூடிய ஊட்டச்சத்து மருந்து ஊசி மூலம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வால்பாறை அருகே காயங்களுடன் பிடிபட்ட குட்டி ஆண் புலி: வனத்துறையினர் தீவிர சிகிச்சை… தாய் புலி நடமாட்டமா ?

பிடிபட்ட புலிக்கு உணவாக பால், இறைச்சி ஆகிய உணவுகளும் வழங்கப்படுகிறது. ஓரிரு நாட்கள் சிகிச்சை அளித்து, உடல்நிலை முன்னேற்றம் அடைந்த பிறகு, அந்த புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதா அல்லது சென்னையில் உள்ள வண்டலூர் வன உயிரின பூங்காவுக்கு கொண்டு செல்வதா என்பது குறித்து வனத்துறையின் முதன்மை தலைமை வனபாதுகாவலர் மற்றும் வனவிலங்கு பாதுகாவலர் ஆகியோரின் உத்தரவின்பேரில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், வழக்கமாக வனப்பகுதியை விட்டு எளிதில் புலிகள் வெளியே வராது. ஆனால், பிறந்து 8 மாதங்களே ஆன ஆண் புலி மக்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்து உள்ளது. அதன் தாய் புலி வேட்டையாட அந்த புலி குட்டிக்கு கற்றுக்கொடுக்க அழைத்து சென்றிருக்கலாம்.

வால்பாறை அருகே காயங்களுடன் பிடிபட்ட குட்டி ஆண் புலி: வனத்துறையினர் தீவிர சிகிச்சை… தாய் புலி நடமாட்டமா ?

இதனால், நீண்ட தூரம் நடந்து செல்ல அந்த குட்டிப் புலியால் முடியாத நிலை ஏற்பட்டதால், குட்டிப் புலியை விட்டுவிட்டு தாய் புலி வேட்டையாட சென்றிருக்கலாம். இதனால் தாய் புலி வரவாய்ப்பு இருப்பதால், தாய் புலி நடமாட்டம் தொடர்பாக முடீஸ் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வனத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

வால்பாறை அருகே காயங்களுடன் பிடிபட்ட குட்டி ஆண் புலி: வனத்துறையினர் தீவிர சிகிச்சை… தாய் புலி நடமாட்டமா ?

இதையடுத்து, மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் முடீஸ் பகுதியில் வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இன்னும் ஓரிரு நாட்களுக்கு இரவில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*