விரைவில் மின்கட்டணம், சொத்துவரி உயருகிறது…?

65 / 100

தமிழ்நாடு அரசின் நிதிநிலைமை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், விரைவில் மின்கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வரிகளை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் மின்கட்டணம், சொத்துவரி உயருகிறது…?

கடந்த இருபது ஆண்டுகளுக்கு பிறகு, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை வெள்ளை அறிக்கையை இன்று வெளியிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது :- நடப்பு நிதி ஆண்டின் இடைக்கால நிதிநிலை மதிப்பீடுகளின்படி தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.39,079 கோடி மறைமுக கடனாக எடுக்கப்பட்டு இருக்கிறது. 15 ஆண்டுகளாக மோட்டார் வாகன வரி மாற்றப்படாமல் அப்படியே இருக்கிறது. குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மட்டும்தான் மிக குறைவாக உள்ளது. மேலும், 0% வரி என்பது அர்த்தம் இல்லாதது; நாட்டின் வளர்ச்சிக்காக உரிய வரிகள் பெறப்பட வேண்டும்.

வெளிநாடுகளில் வரி அதிகமாக விதிக்கப்படுவதால் மக்கள் நல திட்டங்கள் வெகுவாக செயல்படுத்தப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் வருமானம் அதிகரித்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து பெறவேண்டிய நிதி 30% குறைந்துள்ளது. 2014-க்கு பிறகு மின்சார கட்டணமும் இதுவரை உயர்த்தப்படாமல் இருக்கிறது. அதேபோல், சொத்து வரியையும் பல ஆண்டுகளாக உயர்ந்தவில்லை. கடந்த ஆட்சியில் சரியான நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் அரசுக்கு ரூ. 2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

விரைவில் மின்கட்டணம், சொத்துவரி உயருகிறது…?

கடந்த காலங்களில் வரி அல்லாத வருமானம் முந்தைய திமுக ஆட்சியில் 1% ஆக இருந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 0.7%கள் வருமானம் குறைந்துள்ளது. அதேபோல், 2008-09ஆம் ஆண்டில் 13.35% ஆக இருந்த மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, தற்போது, 2020-21ஆம் ஆண்டில் 8.7% ஆக குறைந்துள்ளது. உற்பத்தியில் இருந்து கிடைக்கும் வருவாய் 28% சரிந்துள்ளது.

மேலும், வணிக வரியிலிருந்து வரும் வருமானம் 4.19% குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் வரி வருவாய் வளர்ச்சி 4.4%கள் சரிந்துள்ளது. இந்தநிலையில், பெட்ரோல்-டீசல் விற்பனை மூலமாக மாநிலங்களுக்கு கிடைத்த வருவாயையும் மத்திய அரசு எடுத்துக் கொண்டது. செஸ் வரியால் பெட்ரோல்-டீசல் விற்பனை மூலமாக மத்திய அரசுக்கு ரூ.31.50 கிடைக்கிறது. மேலும், செஸ் வரி என்ற பெயரில் மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய வரி பங்கீட்டை பெருமளவு மத்திய அரசு குறைத்துவிட்டது. பெட்ரோல்-டீசல் விற்பனை மூலமாக செஸ் வரியால் மாநில அரசுக்கு 2 பைசாதான் தற்போதுவரை கிடைக்கிறது.

விரைவில் மின்கட்டணம், சொத்துவரி உயருகிறது…?

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கவேண்டிய ரூ.20,033 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையாக உள்ளது. தமிழ்நாட்டில் நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டிய 1,200 கோடி ரூபாய் மின்சார கட்டணம் இதுவரை செலுத்தாமல் வைத்துள்ளன. அதேபோல, ஒரு நாள் வட்டியாக மட்டும் சுமார் 87.31 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு செலுத்துகிறது. தமிழ்நாட்டில் 1 கி.மீ. தூரம் பொது போக்குவரத்து இயங்கினால் ரூ.59.15 இழப்பு ஏற்படுகிறது. இதற்கு பெட்ரோல்-டீசல் விலை உயர்வு ஒரு முக்கிய காரணமக இருக்கிறது. இந்தநிலையில், போக்குவரத்து துறையைப் பொறுத்தவரை தவறான நிதி மேலாண்மையே இதற்கு முதல் காரணம் என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை தொடர்பாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில், நிதியமைச்சர் வெளியிட்டுள்ள தமிழக அரசின் வெள்ளை அறிக்கையின் விபரங்களை பார்க்கும் போது திகைப்பாக இருக்கிறது. மேலும், வருவாய் இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். இதனால், பாதிக்கப்படப் போவது மக்கள்கள்தான். அரசுக்கு வருவாயை அதிகரிக்க, அரசு வரிகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கடனுக்கே தற்போது வரிகள் உயர்த்துவது என்பது, பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும். ஆனால், தற்போதைய ஆளும் திமுக அரசும் பணப் பலன் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

விரைவில் மின்கட்டணம், சொத்துவரி உயருகிறது…?

மேலும், தேர்தலில் நேரத்தில் அறிவித்த பணப் பலன் சார்ந்த அறிவிப்புகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு இன்னும் ஆரம்பிக்கவில்லை. இந்த சூழலிலேயே தமிழ்நாடு அரசின் நிதிநிலைமை மிகவும் பரிதாப நிலையில் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, திமுக தேர்தல் அறிவிப்புகளை நிறைவேற்றும் போது தமிழ்நாடு அரசின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும். இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் வரிகளை உயர்த்துவதே ஒரே வழியாக இருக்கக்கூடும்.

விரைவில் மின்கட்டணம், சொத்துவரி உயருகிறது…?

இதையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் கூட மின்கட்டணம், சொத்து வரி உயர்த்தப்படாமல் இருப்பதாக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சுட்டிக் காட்டியுள்ளார். அதன்படி பார்த்தால், அவர் மறைமுகமாக விரைவில் வரி உயர்வு இருப்பதை தெளிப்படுத்தியுள்ளார். மேலும், ஒரு குடும்பத்தின் மீது 2.63 லட்சம் கடன் இருப்பதாக வெள்ளை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்குமா.? இல்லை வரிச்சுமை மக்களின் மீது சுமத்தப்படுமா.? என்பது தமிழ்நாடு அரசின் எதிர்வரும் நடவடிக்கைகளை பொறுத்துதான் இருக்கும்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*