வெற்றிவேல், வீரவேல் என தமிழில் கூறி பிரதமர் மோடி பிரசாரத்தை தொடங்கினார்

கோவை, கொடிசியாவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் வெற்றிவேல், வீரவேல் என தமிழில் கூறி பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

வெற்றிவேல், வீரவேல் என தமிழில் கூறி பிரதமர் மோடி பிரசாரத்தை தொடங்கினார்

பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசுகையில், தமிழகத்தில் நடக்கப்போகும் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். நாட்டின் வளர்ச்சியை மையப்படுத்துகிற அரசாங்கத்தையே மக்கள் இதுவரை தேர்ந்தெடுத்து வருகின்றனர். நாங்கள் கூட்டாட்சி – கூட்டுறவு என்ற கொள்கையை மையப்படுத்தி ஆட்சி நடத்தி வருகிறோம்.

இதில், சிறு மற்றும் குறு தொழில் மேம்பாட்டுக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்கிறது. அதோடு, சுங்கவரி உள்ளிட்ட வரி குறைப்பு மூலம் தொழில் மேம்பாட்டுக்கு உதவியுள்ளோம். கடந்த 7 ஆண்டில் ஜவுளித்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு தொழில்கள் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது.

மேலும், விவசாயத்துறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. தமிழக கலாச்சார விழாக்கள் உலகளவில் பெருமை பெற்றது. திமுகவும், காங்கிரசும் ஊழலில் ஊறிய கட்சிகள்.

வெற்றிவேல், வீரவேல் என தமிழில் கூறி பிரதமர் மோடி பிரசாரத்தை தொடங்கினார்

ஒரு பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தன்னுடைய சட்டை பையை நிரப்பி கொள்வதற்காகவே திமுக, காங்கிரஸ் கட்சிகள் அமைத்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறது. மத்திய அரசின் திட்டங்களால் ஏழைகளே அதிகம் பலனடைகின்றனர். இதில், திமுக, காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியால் ஒருபோதும் தமிழ்நாட்டுக்கு நல்லாட்சியை தரமுடியாது என்று கூறினார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*