வேட்பாளர் மாற்றத்தால் அதிமுக மாவட்ட அலுவலகம் மீது தாக்குதல்: தேர்தல் பிரச்சார வாகனத்தை அடித்து நொறுக்கினார்கள்

வேட்பாளர் மாற்றத்தால் அதிமுக மாவட்ட அலுவலகம் மீது தாக்குதல்: தேர்தல் பிரச்சார வாகனத்தை அடித்து நொறுக்கினார்கள்

குறிஞ்சிப்பாடி தொகுதியில் அதிமுகவின் வேட்பாளரை மாற்றம் செய்திருப்பதாக ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமை அறிவித்துள்ளது. அங்கே திமுக சார்பில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போட்டியிடும் அந்தத் தொகுதியில், அதிமுக சார்பில் பழனிசாமி என்பவரை வேட்பாளராக அறிவித்திருந்தது. இப்போது, திடீரென பழனிசாமியை மாற்றிவிட்டு பரங்கிப்பேட்டையை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயத்திற்கு குறிஞ்சிபாடி தொகுதிக்கு வேட்பாளராக அறிவித்தது.

வேட்பாளர் மாற்றத்தால் அதிமுக மாவட்ட அலுவலகம் மீது தாக்குதல்: தேர்தல் பிரச்சார வாகனத்தை அடித்து நொறுக்கினார்கள்

இதனால். பழனிச்சாமியை மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆத்திரமடைந்த பழனிச்சாமியின் ஆதரவாளர்கள், கடலூர் அதிமுக அலுவலகத்தை அடித்து உடைத்தனர். அலுவலகத்தின் கண்ணாடிகளை உடைத்து, கல்வீசி தாக்குதல் நடத்தினர். அமைச்சர் சம்பத்தின் தேர்தல் பிரச்சார வாகனத்தை அடித்து நொறுக்கினார்கள். அந்தநேரத்தில் முதல் தளத்தில் அமைச்சர் சம்பத்தின் மகன் பிரவீன் தலைமையில், அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டு இருந்தது.

இதையடுத்து, அதிமுவினர் சிலர் அமைச்சர் சம்பத்தின் மகன் பிரவினை பத்திரமாக மேல் மாடிக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்கள் பழனிச்சாமி ஆதரவாளர்களை துரத்தி சென்று தாக்கினர்.

வேட்பாளர் மாற்றத்தால் அதிமுக மாவட்ட அலுவலகம் மீது தாக்குதல்: தேர்தல் பிரச்சார வாகனத்தை அடித்து நொறுக்கினார்கள்

இதில் பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கார்கள் உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்பாதிரி புலியூர் போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினர் மீதும் தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர். இதையடுத்து, அதிமுக அலுவலகத்தை சுற்றி முழு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதனால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*