வேளாண் பட்ஜெட்: நெல் ஜெயராமன் பெயரால் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் -வேளாண் அமைச்சர் அறிவிப்பு

64 / 100

மறைந்த நெல் ஜெயராமன் பெயரில் மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்கும் வகையில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

வேளாண் பட்ஜெட்: நெல் ஜெயராமன் பெயரால் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் -வேளாண் அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையின் வரலாற்றில், வேளாண்மை துறைக்கென்று தனி பட்ஜெட் முதல் முறையாக இன்று தாக்கலாகியிருக்கிறது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி ஒரு பகுதியாக, மறைந்த நெல் ஜெயராமன் பெயரில் மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்கும் வகையில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதையடுத்து, மழையில் நெல் மூட்டைகள் நனைந்து பதிக்கப்படுவதை தடுக்க நோக்கில் ரூ.52.02 கோடியில் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் பட்ஜெட்: நெல் ஜெயராமன் பெயரால் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் -வேளாண் அமைச்சர் அறிவிப்பு

நெல்லுக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சன்ன ரகம் நெல்லுக்கான ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு ரூ.70 இருந்து ரூ.100 ஆக உயர்த்தி ரூ.2,060க்கு கொள்முதல் செய்யப்படும் என்றும், சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு ரூ.50 இருந்து ரூ.75 ஆக உயர்த்தி ரூ.2,015க்கு கொள்முதல் எனவும் வேளாண் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாரம்பரிய நெல் விதைகள் அரசு விதைப் பண்ணைகள் மூலம் ரூ.25 லட்சம் செலவில் உற்பத்தி செய்யப்படும் எனவும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*