வேளாண் பட்ஜெட்: பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்

60 / 100

76 லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனங்கன்றுகளையும் முழு மானியத்தில் நடப்பாண்டில் 30 மாவட்டங்களில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்படுள்ளது.

வேளாண் பட்ஜெட்: பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில், வேளாண்மை துறைக்கென்று தனி பட்ஜெட் முதல்முறையாக இன்று தாக்கலாகியிருக்கிறது. உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி ஒரு பகுதியாக, பனை உற்பத்தியை பெருக்க திட்டம் வகுக்கப்பட்டுயிருக்கிறது. மேலும், 76 லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனங்கன்றுகளையும் முழு மானியத்தில் நடப்பாண்டில் 30 மாவட்டங்களில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

வேளாண் பட்ஜெட்: பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்

மேலும், தமிழ்நாட்டில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது என்றும் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பனை வெள்ளத்தின் உற்பத்தியை பெருக்கி, பனை வெல்லத்தை ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவு தானியங்கள் உற்பத்தியில் நடப்பாண்டு 125 மெட்ரிக் டன் என்ற இலக்கை எய்திட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தென்னையில் உற்பத்தித் திறனை அதிகரிக்க ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாக சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேளாண் பட்ஜெட்: பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்

மேலும், தென்னையில் பாதிப்பை ஏற்படுத்திடும் வெள்ளை ஈயின் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*