வேளாண் பட்ஜெட் : விவசாயத்திற்கான இலவச மின்சாரத் திட்டத்தில் மின்சார வாரியத்திற்கு ரூ.4,508 கோடி நிதி ஒதுக்கீடு

விவசாயத்திற்காக இலவச மின்சாரத் திட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.4,508.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் பட்ஜெட் : விவசாயத்திற்கான இலவச மின்சாரத் திட்டத்தில் மின்சார வாரியத்திற்கு ரூ.4,508 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ்நாடு சட்டப்பேரவையின் வரலாற்றில், இதுவரியில்லாத முதல்முறையாக வேளாண்மை துறைக்கென்று தனி பட்ஜெட்டாக இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்தநிலையில், விவசாயத்திற்காக இலவச மின்சாரத் திட்டத்தில் மின்சார வாரியத்திற்கு ரூ.4,508 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சூரிய சக்தியால் இயங்கக்கூடிய பம்பு செட்டுகளுக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் பட்ஜெட் : விவசாயத்திற்கான இலவச மின்சாரத் திட்டத்தில் மின்சார வாரியத்திற்கு ரூ.4,508 கோடி நிதி ஒதுக்கீடு

இதையடுத்து, சூரிய சக்தியால் இயங்கும் 5,000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் நடப்பு ஆண்டில் நிறுவப்படும் என்றும் சூரிய சக்தி பம்பு செட்டுகளுக்கான மானியத் திட்டத்தில் ரூ.114.68 கோடி செலவில் செயல்படுத்தப்படும் எனவும் வேளாண் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ரூ.1 கோடி நிதி ஒதுக்கீட்டில் மின்மோட்டார் பம்புசெட் மானியத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் மானியத்தில் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு பம்பு செட்டிற்கும் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரத்தை அரசே மின் வாரியத்திற்கு செலுத்தும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*