ஹலோ உங்க சிம் கார்டு பிளாக் ஆகிடும் என்று மோசடி செய்யும்  ஆன்லைன் கொள்ளையர்கள்

11 / 100

இணையதளம் மூலமாக தொழில்நுட்பங்கள் வளர வளர நம் உலகம் சுருங்கி கொண்டிருக்கிறது. இது உண்மையில் மகிழ்ச்சியடையும் விசயம்தான்.  ஆனால், இதே தொழில்நுட்பங்களை கொண்டு உலகின் எந்த மூலையிலிருந்தும் மக்களை மிக எளிதாக ஏமாற்றி மோசடி செய்துவிட முடியும் என்பதுதான் மிகவும் வேதனையான விசயம். இப்போதெல்லாம் குறுக்குவழிகளில் ஆன்லைன் கொள்ளையர்கள் அறியாத தெரியாத மக்களிடம் மிக எளிதாக ஏமாற்றி அவர்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையடித்து விடுகின்றனர். தற்போது பட்டிதொட்டியெங்கும் அனைத்து மக்களிடமும் பரவிக்கிடக்கிறது ஸ்மார்ட்போன்கள்.

ஹலோ உங்க சிம் கார்டு பிளாக் ஆகிடும் என்று மோசடி செய்யும்  ஆன்லைன் கொள்ளையர்கள்

இதை ஆன்லைன் கொள்ளையர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்கிறார்கள். ஸ்மார்ட்போன்களைப் பற்றி பெரிதும் தெரியாத மக்களிடம் லாவகமாக பேசி தகவல்களை அவர்களுக்கே தெரியாமல் பெற்று, அந்த தகவல்கள் மூலம் வங்கிக் கணக்கிலிருந்து கொள்ளையடிக்கிறார்கள். பொதுமக்களுக்கு மட்டுமல்ல அரசு அதிகாரிகளுக்கே போன் செய்து பேசுகிறார்கள். பொதுமக்களிடம் போன் செய்து வங்கி கணக்கு விவரங்கள், ஏடிஎம் கார்டு எண் என அனைத்தையும் பெற்று அதன்மூலம் பணம் பறித்துவிடுகிறார்கள். இதனால் அரசு நீதியாகவும் ஊடகங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்பட்டு தற்போது மக்கள் உஷாராகிவிட்தார்கள். அதனால் ஆன்லைன் கொள்ளையர்கள் இப்போது புது டெக்னிக் ஒன்றை  கண்டுபிடித்துள்ளார்கள்.

பொதுமக்களாகிய உங்களுக்கு போன் செய்து உங்களின் சிம் கார்டு காலாவதி ரினிவல் (Renewal) ஆகபோகிறது. ஆதலால் உடனடியாக உங்கள் சிம் கார்டுக்கு 10 ரூபாய் ரீசார்ஜ் (Recharge) செய்யவேண்டும். இல்லையென்றால்  உங்களுடைய சிம் கார்டு இன்னும் சில மணி நேரங்களில் முடக்கப்பட்டு விடும் என்று கூறுவார்கள். 

ஹலோ உங்க சிம் கார்டு பிளாக் ஆகிடும் என்று மோசடி செய்யும்  ஆன்லைன் கொள்ளையர்கள்

அப்படி எதிர்முனையிலிருந்துஅவர்கள் பேசினாலே கண்டிப்பாக  அவர்கள் மோசடிக்காரர்கள் தான் என்று உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அவர்களின் எச்சரிக்கைக்கு நீங்கள் பயந்துவிட்டால், அவர்கள் உருவாக்கிய ஒரு மொபைல் ஆப்பை டவுன்லோட் செய்ய சொல்லி அதில் உங்களின் தனிப்பட்ட சீக்ரெட் தகவல்களைப் பதிய சொல்வார்கள். அந்தத் தகவல்களைக் கொண்டு  உங்களது வங்கியிலிருந்து பணத்தைக் கொள்ளையடிப்பார்கள்.

ஆனால், நீங்கள் பயப்படாமழும் ஏமாறாமலும் இருந்து உங்கள் விருப்பத்திற்கு  உங்கள் மொழியில் பலமாக பதில் சொன்னால் அந்தக் கொள்ளையன் பயந்து தெறித்து ஓடிவிடும். ஆகவே கொள்ளைர்களிடமிருந்து உஷாராக இருங்கள் என சைபர் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். 

ஒருவேளை நீங்கள் பாதிக்கப்பட்டாலும் கவலையில்லை. உடனடியாக உங்கள் போன் வோடாபோன், ஜியோ போன்றவை நெட்வொர்க் நிறுவனங்களுக்கு நீங்கள் தகவல் தெரிவித்து, கொள்ளையர்கள் பயன்படுத்திய டவர் லொக்கேசன் பார்க்க வேண்டும். அதனடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையை தொடங்க முடியும். போலியாக வங்கிக் கடன் அட்டை, ஏடிஎம் கார்டு மூலம் பணம் திருடுவோருக்கு அந்தப் பணம் 5 மணி நேரத்துக்கு பிறகே செல்லும் என்பதால் அதற்குள் பணத்தை மீட்டுவிடலாம். ஆகவே உடனே புகார் கொடுங்கள்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*