100 ஆண்டுகளுக்கு மேலாக போஸ்டர்களே ஒட்டப்படாத கிராமம்: புரட்சி செய்யும் ‘ஒத்தவீடு’ கிராமம்

100 ஆண்டுகளுக்கு மேலாக போஸ்டர்களே ஒட்டப்படாத கிராமம்: புரட்சி செய்யும் 'ஒத்தவீடு' கிராமம்
100 ஆண்டுகளுக்கு மேலாக போஸ்டர்களே ஒட்டப்படாத கிராமம்: புரட்சி செய்யும் 'ஒத்தவீடு' கிராமம்

இந்த கிராமத்தில் தென்பட்டவர்களிடம் கேட்ட முதல் கேள்வியே அதென்ன ஒத்தவீடு? என்பது தான்.

100 ஆண்டுகளுக்கு மேலாக போஸ்டர்களே ஒட்டப்படாத கிராமம்: புரட்சி செய்யும் 'ஒத்தவீடு' கிராமம்

மதுரை மாவட்டத்தில் இதுவரைக்கும் அரசியல், சினிமா, திருமணம் சார்ந்த எந்தவிதமான விளம்பரங்களும் இல்லாத ஒரு ஊர் உண்டு. அதன் பெயர் ஒத்தவீடு. பல இடங்களில் சில நாட்களுக்கு கூட கடைப்பிடிக்க முடியாத ஒரு பழக்கத்தை, இந்த சிறிய கிராமம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றி புரட்சி செய்தது வருகின்றனர்.

மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருப்பாயூரணி பகுதியில் இருக்கிறது ‘ஒத்தவீடு’ எனும் சிறிய கிராமம் உள்ளது. கிராமத்திற்குள் நுழையும் முன், இந்த கிராமத்தில் எங்கும் நோட்டீஸ் ஒட்டவோ, அச்சு பதிக்கவோ கூடாது என்னும் வாசகத்துடன் ஒத்தவீடு கிராமத்தின் பெயர் பலகை நம்மை வரவேற்றது.

மேலும், வண்டியூர் பஞ்சாயத்து பகுதிக்குள் இருந்த கிராமம், தற்போது, மதுரை மாநகராட்சி பகுதிக்குள் சேர்க்கப்பட்டாலும், கோவில் பஞ்சாயத்து திண்ணை, பழைய பேருந்து நிறுத்தம், காமராஜர் திறந்து வைத்த மனமகிழ் மன்றம் என காண்பவை எல்லாம் கிராமத்தின் சாயலை அப்படியே பிரதிபலிக்கின்றன.

100 ஆண்டுகளுக்கு மேலாக போஸ்டர்களே ஒட்டப்படாத கிராமம்: புரட்சி செய்யும் 'ஒத்தவீடு' கிராமம்
ஒத்தவீடு Vengai 3

இந்த ஊரில் தென்பட்டவர்களிடம் கேட்ட முதல் கேள்வியே ‘அதென்ன ஒத்தவீடு?’ என்பதே..!

சுமார் 100 வருடங்களுக்கு முன்பு, இந்த இடம் காடாக கிடந்துள்ளது. இந்தப் பகுதிக்கு, திருமங்கலத்தில் இருந்து மூன்று குடும்பத்தினர் வந்துள்ளனர். அவர்கள், ஒரு வீட்டில் தங்கியுள்ளனர். இந்த ஊரில் அவர்கள் இருந்த அந்த ஒரு வீட்டை குறிப்பிடும் படியாக உருவான வார்த்தையே, ஊரின் பெயராக மாறி விட்டது. அந்த ஊரில் புகழ்பெற்ற காந்தியவாதியான என்.எம்.ஆர்.சுப்புராமனின் வீடுதான் அந்த ‘ஒத்த வீடு’ என்று பெருமையோடு பதிலளித்தனர்.

100 ஆண்டுகளுக்கு மேலாக போஸ்டர்களே ஒட்டப்படாத கிராமம்: புரட்சி செய்யும் 'ஒத்தவீடு' கிராமம்
ஒத்தவீடு Vengai 5

அந்த ஒரு வீடுதான், இப்போது சுமார் 300 வீடுகளாகவும், 650 வாக்காளர்கள் கொண்ட ஊராகவும் மாறியுள்ளது. ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் மட்டும் இன்றும் அப்படியே உள்ளன.

இந்த ஊரில் அரசியல் சார்ந்த போஸ்டர்களோ, பேனர்களோ, கொடிகளோ, சிலைகள் என எந்த விளம்பரங்களும் இந்த ஊருக்குள் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள் மக்கள். அதுமட்டுமல்ல, திருமணத்திற்கு கூட போஸ்டர், பேனர் வைப்பதில்லை. முன்னோர்களின் கட்டுப்பாடுகளை பின்பற்றும் விதமாக சினிமா பிரபலங்களுக்கு கூட, இந்த ஊர் இளைஞர்கள் எந்த விளம்பரமும் செய்வதில்லை என்பதுதான் ஆச்சரியம்.

100 ஆண்டுகளுக்கு மேலாக போஸ்டர்களே ஒட்டப்படாத கிராமம்: புரட்சி செய்யும் 'ஒத்தவீடு' கிராமம்
ஒத்தவீடு Vengai 4

இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த 69 வயது இளங்கோவன் கூறுகையில், ‘அரசியல் சார்புகள் இருந்தால் போட்டி ஏற்படும். தேவையில்லாமல் ஊரின் ஒற்றுமைக்கும், அழகிற்கும் பங்கம் ஏற்பட்டுவிடும் என்ற காரணத்திற்காக, இந்த கட்டுப்பாட்டை பின்பற்றி வருகிறோம்.

ஆனால், கட்சி சார்பின்றி அனைத்து வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்க வருவார்கள். வருபவர்களை வரவேற்போம், உரிய மரியாதை செய்து தேவையான கோரிக்கைகளை தெரிவித்து அனுப்புவோம் என்றவர், ‘மக்களின் பணியை நாங்கள் சரியாய் செய்கிறோம். ஆனால், அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் அவர்களுடைய பணியை சரியாய் செய்வதில்லை. இன்னும் இங்கே சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவைகள் இதுவரை சரியாக கிடைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்தார்.

100 ஆண்டுகளுக்கு மேலாக போஸ்டர்களே ஒட்டப்படாத கிராமம்: புரட்சி செய்யும் 'ஒத்தவீடு' கிராமம்
ஒத்தவீடு Vengai 2

‘யாரும் இறந்தாலும் கூட பாரம்பரிய முறைப்படி தப்பு மட்டுமே வைத்து அடக்கம் செய்வோம். பேனர் மற்றும் கொட்டு மேளம் கூட வைத்துக்கொள்ள மாட்டோம். அனைத்து சாதியினரும் வசித்தாலும், யாரிடமும் எந்தவித பாகுபாடும் இங்கே இருக்காது என்றார் அந்த ஊர், அந்த பெரியவர்.

மேலும், எங்கள் ஊர் அழகான, பெருமை பெற்ற ஊர் தான். ஆனால், ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு நாங்கள், கருப்பாயூரணி வரை செல்ல வேண்டியுள்ளது. எனவே, இங்கு ரேஷன் கடை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், நல்ல குடிநீர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் பழனியம்மா என்ற மூதாட்டி.

100 ஆண்டுகளுக்கு மேலாக போஸ்டர்களே ஒட்டப்படாத கிராமம்: புரட்சி செய்யும் 'ஒத்தவீடு' கிராமம்
ஒத்தவீடு Vengai 1

வெளியூரிலிருந்து வரும் நண்பர்கள் எங்கள் ஊரை பார்த்து பார்த்து பிரம்மிப்பார்கள். நகரத்தை போன்ற மாறுதல்களுக்கு ஊர் பழகி இருந்தாலும், கிராமத்தை போல மாறாத கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்கிறது’ என பெருமையுடன் கூறினார் இளம்பெண் கிருத்திகா.

ஒரே ஒரு வீட்டை கொண்டிருந்த ஒரு சிறிய கிராமம், தனது பழமை மாறாமல் பல தலைமுறைகளாக பயணிப்பது ஒருபுறம் பெருமையாக இருந்தாலும், அடுத்த தலைமுறையினர் நிம்மதியாக வாழ தேவையான, அடிப்படை வசதிகள் கூட இங்கு இன்னும் பூர்த்தியடையாமல் இருப்பது வருத்தமடைய வைக்கிறது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*