117 பெண் வேட்பாளர்கள், 117 ஆண் வேட்பாளர்கள்: 234 வேட்பாளர்களை ஒரேமேடையில் அறிமுகப்படுத்திய சீமான்

117 பெண் வேட்பாளர்கள், 117 ஆண் வேட்பாளர்கள்: 234 வேட்பாளர்களை ஒரேமேடையில் அறிமுகப்படுத்திய சீமான்
60 / 100

திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

117 பெண் வேட்பாளர்கள், 117 ஆண் வேட்பாளர்கள்: 234 வேட்பாளர்களை ஒரேமேடையில் அறிமுகப்படுத்திய சீமான்

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக வேட்பு மனு தாக்கல் மார்ச் 10ஆம் தேதி தொடங்குகிறது.

117 பெண் வேட்பாளர்கள், 117 ஆண் வேட்பாளர்கள்: 234 வேட்பாளர்களை ஒரேமேடையில் அறிமுகப்படுத்திய சீமான்

இந்தநிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதையடுத்து, நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்து வேட்பாளர்களையும் இன்று அறிமுகம் செய்துள்ளது.

117 பெண் வேட்பாளர்கள், 117 ஆண் வேட்பாளர்கள்: 234 வேட்பாளர்களை ஒரேமேடையில் அறிமுகப்படுத்திய சீமான்

வேட்பாளர்கள் அறிவிப்பு விழா நடைபெற்ற மேடையில், 117 ஆண் வேட்பாளர்களும், 117 பெண் வேட்பாளர்களும் அமர்ந்திருந்தனர்.

117 பெண் வேட்பாளர்கள், 117 ஆண் வேட்பாளர்கள்: 234 வேட்பாளர்களை ஒரேமேடையில் அறிமுகப்படுத்திய சீமான்

234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரேமேடையில் வெகு பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தி முதல் கட்சி நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சியை 2011 ஆம் ஆண்டு தொடங்கிய சீமான், முதலில் 2016 ஆம் ஆண்டு கடலூர் தொகுதியில் களம்கண்டார்.

117 பெண் வேட்பாளர்கள், 117 ஆண் வேட்பாளர்கள்: 234 வேட்பாளர்களை ஒரேமேடையில் அறிமுகப்படுத்திய சீமான்

இதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் களமிறக்கினார்.

117 பெண் வேட்பாளர்கள், 117 ஆண் வேட்பாளர்கள்: 234 வேட்பாளர்களை ஒரேமேடையில் அறிமுகப்படுத்திய சீமான்

இந்நிலையில், திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதானி குழுமம் எண்ணூரை அடுத்த காட்டுப்பள்ளியில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே நான் அங்கு களம்காண்கிறேன்.

117 பெண் வேட்பாளர்கள், 117 ஆண் வேட்பாளர்கள்: 234 வேட்பாளர்களை ஒரேமேடையில் அறிமுகப்படுத்திய சீமான்

திருவொற்றியூரில் தான் இடம் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என்றும் சீமான் தெரிவித்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, மு.க.ஸ்டாலின் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என சீமான் கூறியிருந்தார். இந்த தேர்தலில் தமிழரா? திராவிடரா? என ஒரு கை பார்த்துடுவோம் என சீமான் சவால் விட்டிருந்தார். இதனால் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் சீமான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*