15 தொகுதி, ஒரு எம்பி சீட், தேமுதிகவை அழைக்கும் அதிமுக: கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா தேமுதிக ?

15 தொகுதி, ஒரு எம்பி சீட், தேமுதிகவை அழைக்கும் அதிமுக: கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா தேமுதிக ?

அதிமுக உடனான தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ள நிலையில்,
நீங்கள் 15 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டால், தொகுதி பங்கீடு உடன்பாட்டில் கையெழுத்திட வருமாறு தேமுதிகவுக்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது.

15 தொகுதி, ஒரு எம்பி சீட், தேமுதிகவை அழைக்கும் அதிமுக: கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா தேமுதிக ?

ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தமிழக தேர்தல் களம் பரபரப்பாக மாறியுள்ளது.அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 சீட்டுகள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் கேட்ட 10.5%இடஒதுக்கீடும் அழிக்கப்பட்டுவிட்டது. மகிழ்ச்சியில் இருந்த பாமக இன்று தேர்தல் அறிக்கை வெளியிடும் அளவுக்கு சுறுசுறுப்பாக பணிசெய்து வருகின்றனர்.

15 தொகுதி, ஒரு எம்பி சீட், தேமுதிகவை அழைக்கும் அதிமுக: கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா தேமுதிக ?

அதேசமயம் பாஜகவுடன் தொகுதி ஒதுக்கீடு நாளை இறுதியாகும் என்று கூறப்படும் நிலையில், தேமுதிகவை அதிமுக ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று கவலைப்படுகிறார்கள் அக்கட்சியினர். விஜயகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடாமல் போக தேமுதிகவின் மவுசு குறைந்துள்ளது. இதனால் அக்கட்சிக்கு பாமக அளவுக்கு முக்கியத்துவம் அளிக்க அதிமுக முன்வரவில்லை. இதனால் பேச்சுவார்த்தைக்கு சென்று தேமுதிக அசிங்கப்பட்டது தான் மிச்சம்.

15 தொகுதி, ஒரு எம்பி சீட், தேமுதிகவை அழைக்கும் அதிமுக: கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா தேமுதிக ?

இந்நிலையில் 15 தொகுதிகளுக்கு ஒப்புக்கொள்ள 15 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டால் தொகுதி பங்கீடு உடன்பாட்டில் கையெழுத்திட வருமாறு தேமுதிவிற்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது.

தேமுதிகவிற்கு அதிமுக தரப்பில் வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படும் 15 தொகுதிகள், ஒரு எம்பி சீட்டை ஏற்க தேமுதிக ஒத்துக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளது. எங்களுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கினால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என தேமுதிக திட்டவட்டமாக கூறியுள்ளது.

15 தொகுதி, ஒரு எம்பி சீட், தேமுதிகவை அழைக்கும் அதிமுக: கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா தேமுதிக ?

மேலும், கேட்ட தொகுதியை ஒதுக்காதபட்சத்தில் கூட்டணி பற்றி அதிமுகவே முடிவு செய்துகொள்ளலாம் என்று தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டணிக்காக யாரிடமும் தேமுதிக கெஞ்சவில்லை என தேமுதிகவின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறிவந்த நிலையில் அதிமுகவின் அழைப்பை தேமுதிக ஏற்கவில்லை.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*